×

கொரோனா வைரஸ் பற்றி சோஷியல் மீடியாக்களில் வதந்திகள் பரப்பினால் அபராதம், ஓராண்டு சிறை!

கொரோனா தாக்குதலிலிருந்து மக்களைக் காக்க அனைத்து மாநில அரசும் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றன கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் 5,000க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் உயிரிழந்துள்ள நிலையில், 1,20,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் பாதிப்பு எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. அதில், இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால், அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், கொரோனா பாதிப்பைத் தேசிய பேரிடராக
 

கொரோனா தாக்குதலிலிருந்து மக்களைக் காக்க அனைத்து மாநில அரசும் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றன

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் 5,000க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் உயிரிழந்துள்ள நிலையில், 1,20,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலும் பாதிப்பு எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. அதில், இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால், அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், கொரோனா பாதிப்பைத் தேசிய பேரிடராக அறிவித்து, பாதிக்கப்பட்டவர்களின் அனைத்து செலவையும் மாநில அரசே ஏற்கும் படி கேட்டுக் கொண்டுள்ளது. 

கொரோனா தாக்குதலிலிருந்து மக்களைக் காக்க அனைத்து மாநில அரசும் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில், கொரோனா பற்றி வதந்தியைக் கிளப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹைதராபாத் நகர போலீஸ் ஆணையர் அஞ்சானி குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் வாயிலாக கொரோனா பற்றி வதந்தியைப் பரப்பி மக்களை அச்சப்பாத்தி வருகின்றனர். இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 1 ஆண்டு சிறையும், அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

அதே போல அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், கொரோனா பற்றி சுகாதாரத்துறை கொடுக்கும் தகவலை மட்டுமே ஊடகங்கள் ஒளிபரப்பினால் போதும் என்றும் தவறான செய்திகள் வெளியிட்டால் தண்டனை என்றும் தெரிவித்துள்ளார்.