×

கொரோனா வைரஸ் பரவல்.. அலுவலகங்களுக்கான புதிய வழிகாட்டுதலை வெளியிட்டது மத்திய அரசு!

அலுவலகங்களுக்கான புதிய வழிகாட்டுதலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் அதிவேகத்தில் பரவி வரும் நிலையில் 4 ஆவது முறையாக மே மாதம் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொழில் நிறுவனங்கள் முடங்குவதையும் மக்களின் நலனை கருத்தில் கொண்டும் ஒரு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதாவது 50% பணியாளர்களுடன் தொழில் நிறுவனங்கள் இயங்கலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டது. அதே போல அந்தந்த மாநிலங்கள் சிவப்பு,ஆரஞ்ச் மற்றும் பச்சை மண்டலங்களுக்கான கட்டுப்பாடுகளை வகுத்துக்
 

அலுவலகங்களுக்கான புதிய வழிகாட்டுதலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அதிவேகத்தில் பரவி வரும் நிலையில் 4 ஆவது முறையாக மே மாதம் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொழில் நிறுவனங்கள் முடங்குவதையும் மக்களின் நலனை கருத்தில் கொண்டும் ஒரு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதாவது 50% பணியாளர்களுடன் தொழில் நிறுவனங்கள் இயங்கலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டது. அதே போல அந்தந்த மாநிலங்கள் சிவப்பு,ஆரஞ்ச் மற்றும் பச்சை மண்டலங்களுக்கான கட்டுப்பாடுகளை வகுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் அலுவலகங்களுக்கான புதிய வழிகாட்டுதலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில், கொரோனா வைரஸ் பரவிய நபர்கள் இருந்த இடங்களுக்கு சீல் வைக்கப்பட்டு வந்த நிலையில் ஒரு அலுவலகத்தில் ஒன்று அல்லது இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் முழு அலுவலகமும் மூட வேண்டிய அவசியம் இல்லை என்றும் கிருமிநாசினியை தெளித்து விட்டு பணிகளை தொடரலாம் என்றும் தெரிவித்துள்ளது. பெரிய அளவில் பாதிப்பு இருந்தால் 2 நாட்கள் அலுவலகங்களை மூட வேண்டும் என்றும் காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறி இருப்பவர்கள் பணிக்கு வருவதை தவிர்த்து வீட்டில் இருந்த படியே பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடு அல்லது வெளிமாவட்டங்களில் இருந்து வரும் அனைவரையும் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் முக்கியமாக சுவாச கோளாறு பிரச்னை இருப்பவர்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் எல்லாரும் பி.சி.ஆர் சோதனையே செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.