×

கொரோனா வைரஸுக்கு எதிரான போர் இதுவரை நல்லது…ஆனால்? – ப.சிதம்பரம் ட்வீட்

கொரோனா வைரஸுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் குறித்து ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். டெல்லி: கொரோனா வைரஸுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் குறித்து ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகாட்ட தொடங்கியுள்ளது. இதுவரை 2 பேர் இந்தியாவில் கொரோனா
 

கொரோனா வைரஸுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் குறித்து ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லி: கொரோனா வைரஸுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் குறித்து ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகாட்ட தொடங்கியுள்ளது. இதுவரை 2 பேர் இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கொரோனா வைரஸுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் குறித்து ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் “கொரோனா வைரஸுக்கு எதிரான போர் இதுவரை நல்லதுஆனால் நாம் இன்னும் அதிகமாக செய்ய முடியுமா? கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை ஒரே வாரத்தில் 31 முதல் 84 ஆக உயர்ந்துள்ளது. சில மாநில அரசுகள் தற்காலிகமாக சில இடங்களை மூட அறிவித்துள்ளன. ஆனால் மத்திய அரசு கூடுதல் நடவடிக்கைகளை சிந்திக்க வேண்டிய நேரம் இது” என்று கூறியுள்ளார்.