×

கொரோனா வைரசுக்கு கர்நாடக முதியவர் முதல் பலி… பீதியை கிளப்பும் கோவிட்-19…

நம் நாட்டில் கர்நாடகாவை சேர்ந்த முதியவர் கொரோனா வைரசுக்கு (கோவிட்-19) முதல் பலியாகி உள்ளார். மேலும், நேற்று வரை கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 75ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவின் வடபகுதியில் உள்ள கலபுர்கியை சேர்ந்த 76 வயதான முதியவர் சமீபவத்தில் சவுதி அரேபியா சென்று வந்து இருந்தார். வந்த சில நாட்களில் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ஹைதராபாத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் கடந்த 10ம் தேதியன்று சிகிச்சை பலனின்றி உயிர்
 

நம் நாட்டில் கர்நாடகாவை சேர்ந்த முதியவர் கொரோனா வைரசுக்கு (கோவிட்-19) முதல் பலியாகி உள்ளார். மேலும், நேற்று வரை கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 75ஆக உயர்ந்துள்ளது.

கர்நாடகாவின் வடபகுதியில் உள்ள கலபுர்கியை சேர்ந்த 76 வயதான முதியவர் சமீபவத்தில் சவுதி அரேபியா சென்று வந்து இருந்தார். வந்த சில நாட்களில் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ஹைதராபாத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் கடந்த 10ம் தேதியன்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

கொரோனா வைரஸால் அவர் இறந்து இறக்கலாம் என்ற சந்தேகம் இருந்ததால், அவரது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டது. அவை கடந்த 11ம் தேதியன்றுதான் பெங்களூரு ஆய்வகத்துக்கு கிடைத்தது. மாதிரிகளை சோதனை செய்து பார்த்ததில் அவருக்கு கொரோனா வைரஸ் இருந்தது உறுதியானது. கர்நாடக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், இறந்து போன வயதான நபர் அண்மையில் கோவிட்19ஆல் பாதிக்கப்பட்ட நாட்டிலிருந்து திரும்ப வந்து இருந்தார். 

தவறான அறிகுறிகள் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம், ஆஸ்துமா மற்றும் உயர்ரத்தஅழுத்தம் போன்ற வயது முதிர்வு பிரச்சினைகளால் அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனைகள் மேற்கொள்வது தாமதமானது. இறந்து போன நபருடன் தொடர்பில் இருந்த அவரது குடும்ப உறுப்பினர்கள், சிகிச்சை அளித்த டாக்டர்கள் என மொத்தம் 43 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் மற்றும் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என தெரிவித்தனர்.