×

கொரோனா பாதிப்பு விளைவு – மும்பையில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முககவசம் அணிவது மும்பையில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மும்பை: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முககவசம் அணிவது மும்பையில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே மகாராஷ்டிரா தான் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாகும். கொரோனாவால் அதிக இறப்புக்கள் மற்றும் பாதிப்புகள் இம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் 5,000-க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகளில் 1,018 பாதிப்புகள் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவை. இம்மாநிலத்தில் 64 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முககவசம் அணிவது மும்பையில்
 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முககவசம் அணிவது மும்பையில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மும்பை: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முககவசம் அணிவது மும்பையில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே மகாராஷ்டிரா தான் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாகும். கொரோனாவால் அதிக இறப்புக்கள் மற்றும் பாதிப்புகள் இம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் 5,000-க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகளில் 1,018 பாதிப்புகள் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவை. இம்மாநிலத்தில் 64 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முககவசம் அணிவது மும்பையில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மும்பை நகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை இந்த விதிமுறையை அறிவித்தனர். இதை மீறுபவர்கள் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்வார்கள். கைது செய்யப்படகூட வாய்ப்புள்ளது. அனைத்து பொது இடங்கள், அலுவலகங்கள், கூட்டங்கள் மற்றும் வாகனம் ஓட்டும்போது என எல்லா இடத்திலும்  முகமூடி அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறை உடனடியாக நடைமுறைக்கு வருவதாக மும்பையில் அறிவிக்கப்பட்டுள்ளது.