×

கொரோனா பாதிப்பில் தமிழகத்தை முந்திய டெல்லி…. மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடம்….

கொரோனா வைரஸ் பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதேசமயம் தமிழகத்தை பின்னுக்கு தள்ளி டெல்லி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கொரோனா வைரஸ் நம் நாட்டில் நாளுக்கு நாள் தீவிரமாக பரவி வருகிறது. கொரேனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. மாநிலங்களின் அறிக்கையின்படி கொரோனாவால் பாதிக்கபட்டவர்களி் எண்ணிக்கை 8,426ஆகவும், பலி எண்ணிக்கை 291ஆகவும் உயர்ந்துள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது. மாநிலங்கள் கொரோனாவால் பாதித்தவர்கள் மகாராஷ்டிரா
 

கொரோனா வைரஸ் பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதேசமயம் தமிழகத்தை பின்னுக்கு தள்ளி டெல்லி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

கொரோனா வைரஸ் நம் நாட்டில் நாளுக்கு நாள் தீவிரமாக பரவி வருகிறது. கொரேனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. மாநிலங்களின் அறிக்கையின்படி கொரோனாவால் பாதிக்கபட்டவர்களி் எண்ணிக்கை 8,426ஆகவும், பலி எண்ணிக்கை 291ஆகவும் உயர்ந்துள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது.

 

மாநிலங்கள்    கொரோனாவால் பாதித்தவர்கள்
மகாராஷ்டிரா             1,761
டெல்லி                        1,069
தமிழ்நாடு                      969
ராஜஸ்தான்                  700
மத்திய பிரதேசம்        529
தெலங்கானா               503
இதர பகுதிகள்          2,895

மொத்தம்                  8,426

 

கொரோனாவால் உயிர் இழந்தவர்கள் பட்டியலிலும் மகாராஷ்டிராதான் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள டெல்லி, மற்றும் தமிழ்நாட்டை காட்டிலும் மத்திய பிரதேசத்தில் உயிர் இழப்புகள் அதிகமாக உள்ளது.

மாநிலங்கள்           கொரோனாவால் இறந்தவர்கள்
மகாராஷ்டிரா          127
மத்திய பிரதேசம்    040
டெல்லி                     019
தெலங்கானா          014
தமிழ்நாடு                010
ராஜஸ்தான்            009
இதர பகுதிகள்        072

மொத்தம்                291