×

கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க 30 சொகுசு பங்களாவை வழங்கிய கோடீஸ்வரர்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் சுமார் 4 லட்சத்து 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ல நிலையில் உயிரழப்பு 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 600 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 10 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸால் மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதையடுத்து இந்தியா முழுதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்குள்ளேயே இருக்க தமிழக அரசும்
 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் சுமார் 4 லட்சத்து 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ல நிலையில் உயிரழப்பு 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது.  இந்தியாவில் 600 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 10 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸால் மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதையடுத்து இந்தியா முழுதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  வீட்டிற்குள்ளேயே இருக்க தமிழக அரசும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. 

இந்நிலையில் கொரோனாவை எதிர்க்க மேற்குவங்க தொழிலதிபர் ஒருவர் தனது சொகுசு பங்களாக்களை அரசுக்கு வழங்க முன்வந்துள்ளார். இந்த வாய்ப்பை மேற்குவங்க அரசும் ஏற்றுக்கொண்டது.  கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஹர்ஷவர்தன் நியோட்டியா, தெற்கு 24 பர்கானாவில் உள்ள தனது 30 சொகுசு பங்களாக்களை மாநில அரசுக்கு வழங்கியுள்ளார். கொரோனாவின் நெருக்கடியான சூழலில் நிலைமையைக் கடக்க பயனுள்ள உள்கட்டமைப்பை வழங்க முன்வந்திருப்பதாக அவர் தெரிவித்தார். 30 அறைகள் கொண்ட பங்களாவில்  தனிமைப்படுத்தப்பட்ட வார்டாகவோ அல்லது மருத்துவ ஊழியர்களின் குடியிருப்பாகவோ பயன்படுத்தப்படலாம் என நியோட்டியா தெரிவித்துள்ளார். தனது பங்களாவில் தங்குபவர்களுக்கு உணவுகளை வழங்க இருப்பதாக நியோட்டியா தெரிவித்துள்ளார்.