×

கொரோனா தொற்று உறுதியானால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் – மம்தா பானர்ஜி!

ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக பிரதமர் மோடி இன்று அனைத்து முதலமைச்சருடனும் ஆலோசனை நடத்தினர். அப்போது ஊரடங்கை மே 21-ம் தேதி வரை நீட்டிக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு குறித்து மத்திய அரசுக்கே தெளிவில்லை. முன்னுக்குப் பின் முரணான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள் என்றும் மம்தா குற்றஞ்சாட்டினர். இந்நிலையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “மேற்குவங்கத்தில் கொரோனா பாதித்த நபர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொள்ளலாம். ஒரு
 

 

ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக பிரதமர் மோடி இன்று அனைத்து முதலமைச்சருடனும் ஆலோசனை நடத்தினர். அப்போது ஊரடங்கை மே 21-ம் தேதி வரை நீட்டிக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு குறித்து மத்திய அரசுக்கே தெளிவில்லை. முன்னுக்குப் பின் முரணான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள் என்றும் மம்தா குற்றஞ்சாட்டினர்.

இந்நிலையில் மேற்குவங்க முதலமைச்சர் ம‌ம்தா பானர்ஜி, “மேற்குவங்கத்தில் கொரோனா பாதித்த நபர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொள்ளலாம். ஒரு நபருக்காக லட்சக்கணக்கானோரை தனிமைப்படுத்த முடியாது. மத்திய அரசு சொல்வதற்கும், உத்தரவுகளுக்கும் முரண்பாடுகள் உள்ளன. ஊரடங்கை கண்டிப்பாக கடைபிடிக்க சொல்கிறது, மறுபுறம் கடைகளை திறக்கச் சொல்கிறது” எனக் கூறினார்.