×

கொரோனா தொடர்பான போலி செய்திகளுக்கு எதிராக நடவடிக்கை – மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு

கொரோனா தொடர்பான போலி செய்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லி: கொரோனா தொடர்பான போலி செய்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக பிரதமர் மோடி இந்தியாவில் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால் மக்களில் பலர் ஊரடங்கை முழுவதுமாக கடைபிடிக்காமல் பைக் மற்றும் காரில்
 

கொரோனா தொடர்பான போலி செய்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெல்லி: கொரோனா தொடர்பான போலி செய்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக பிரதமர் மோடி இந்தியாவில் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால் மக்களில் பலர் ஊரடங்கை முழுவதுமாக கடைபிடிக்காமல் பைக் மற்றும் காரில் சாலைகளில் வலம் வருகிறார்கள். மேலும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கொரோனா தொடர்பான போலி செய்திகளும், வதந்திகளும் அதிகளவில் பரவி வருகின்றன.

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் சமூக வலைதள போலி செய்திகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், “போலிச் செய்திகள் உருவாக்கிய பதற்றத்தால் பெருமளவில் தொழிலாளர்கள் இடம்பெயர நேர்ந்தது. இந்தத் தொழிலாளர்கள் வெளியே சொல்ல முடியாத துயரத்தை அனுபவிக்க இத்தகைய போலிச் செய்திகள் வழிவகுத்துள்ளன. எனவே போலிச் செய்திகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் அஜய்குமார் பல்லா அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். பொதுமக்களுக்காக இந்திய அரசு ஒரு இணையதள முகப்பை உருவாக்கியுள்ளது. இதில் தகவல்கள் மற்றும் உறுதி செய்யப்படாத செய்திகளை சரிபார்த்துக் கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.