×

கொரோனா தடுப்பு நடவடிக்கை: பாலிவுட் நடிகர் அக்சய் குமார் ரூ.25 கோடி நிதியுதவி

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 933ஐ கடந்த நிலையில், இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் எளிதில் பரவும் தன்மை கொண்டதால் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இந்தியா முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில் முடங்கியுள்ளது. பல அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களின் தொழிலை நடத்த முடியாத நிலையில் உள்ளனர். This is that time when all
 

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 933ஐ கடந்த நிலையில், இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் எளிதில் பரவும் தன்மை கொண்டதால் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இந்தியா முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில் முடங்கியுள்ளது. பல அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களின் தொழிலை நடத்த முடியாத நிலையில் உள்ளனர்.

 

 

இந்நிலையில் கொரோனா தடுப்புக்காக தங்களாலான தொகையை கொடுக்கும் படி பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இதையடுத்து பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் அக்சய் குமார் ரூ.25 கோடியை நிதியுதவியாக அளித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அக்சய் குமார், “அனைத்து மக்களையும் வாழ வைக்க உதவும் நேரம் இது. எனது சேமிப்பிலிருந்து ரூ .25 கோடி பங்களிப்பதாக உறுதியளிக்கிறேன். உயிர்களைக் காப்பாற்றுவோம்” என பதிவிட்டுள்ளார்.