×

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தாராளமாக நிதியுதவி அளியுங்கள்: பிரதமர் மோடி

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 199 நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதுவரை உலகம் முழுவதும்6 லட்சத்து 14 ஆயிரத்து 192 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 28ஆயிரத்தை தாண்டியது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 933 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 20பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிக்கு
 

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  உருவான  கொரோனா வைரஸ் தற்போது 199  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  இதுவரை உலகம் முழுவதும்6 லட்சத்து 14 ஆயிரத்து 192 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர்  எண்ணிக்கை 28ஆயிரத்தை தாண்டியது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 933 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 20பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவியை தருமாறு நாட்டுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். PM CARES என்ற நிதிக்கான வங்கி கணக்கில் பொதுமக்கள் நேரடியாக பணத்தை செலுத்தலாம்.  தங்களால் எவ்வளவு நிதி கொடுக்க முடியுமோ அவ்வளவு தரலாம் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். பேரிடர்களின் போது மக்களை காக்க இதுபோன்ற நிதியுதவி உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.