×

கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நபர் – மதுபானம் வாங்க சுவர் ஏறி குதித்ததை போலீசிடம் போட்டுக் கொடுத்த மனைவி

இமாச்சலப் பிரதேசத்தில் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நபர் மதுபானம் வாங்க சுவர் ஏறிக் குதித்த சம்பவம் நடந்துள்ளது. சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நபர் மதுபானம் வாங்க சுவர் ஏறிக் குதித்த சம்பவம் நடந்துள்ளது. குடி ஒரு மனிதனை எந்த எல்லைக்கும் செல்ல வைக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அப்படிப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இமாச்சலப் பிரதேசம் மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
 

இமாச்சலப் பிரதேசத்தில் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நபர் மதுபானம் வாங்க சுவர் ஏறிக் குதித்த சம்பவம் நடந்துள்ளது.

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நபர் மதுபானம் வாங்க சுவர் ஏறிக் குதித்த சம்பவம் நடந்துள்ளது.

குடி ஒரு மனிதனை எந்த எல்லைக்கும் செல்ல வைக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அப்படிப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இமாச்சலப் பிரதேசம் மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். கொரோனா பரவல் அச்சம் காரணமாக அவரையும், அவரது குடும்பத்தினரையும் வெளியே வர வேண்டாம் என்று கூறி போலீசார் வீட்டில் தனிமைப்படுத்தி அறிவுரை வழங்கி சென்றனர்.

ஆனால் அந்த நபர் மதுபானம் வாங்க ஆசைப்பட்டு கடந்த வியாழக்கிழமை தங்கள் வீட்டின் மதில் சுவர் மீது ஏறி தெருவில் குதித்து தனது சகோதரருடன் பார்சார் பகுதியில் ஒரு டாஸ்மாக் கடைக்கு சென்றார். அவரை போகவிடாமல் மனைவி எவ்வளவோ தடுத்தும் அந்த நபர் கேட்கவில்லை. இதனால் கோபமுற்ற அந்த நபரின் மனைவி தனது கணவன் டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளது பற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அந்த டாஸ்மாக் கடைக்கு சென்று அந்த நபரை கையும்,களவுமாக பிடித்த போலீசார் அவர் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவர் ஆசிரியர் என்பதால் அந்த நபர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் கல்வித் துறைக்கு போலீசார் பரிந்துரை செய்தனர்.