×

கேரள அரசு பேருந்து விபத்து : காயமடைந்தவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தல் !

இந்த கோர விபத்தில் 5 பெண்கள் உட்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டம் அவினாசியில் திருவனந்தபுரம் சென்று கொண்டிருந்த கேரள அரசு பேருந்தும் டைல்ஸ் லோடு ஏற்றிச் சென்று கொண்டிருந்த லாரியும் இன்று காலை நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் 5 பெண்கள் உட்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்தில் இருந்த 23 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயப்பட்ட அனைவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு
 

இந்த கோர விபத்தில் 5 பெண்கள் உட்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் திருவனந்தபுரம் சென்று கொண்டிருந்த கேரள அரசு பேருந்தும் டைல்ஸ் லோடு ஏற்றிச் சென்று கொண்டிருந்த லாரியும் இன்று காலை நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் 5 பெண்கள் உட்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்தில் இருந்த 23 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயப்பட்ட அனைவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன், விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்குமாறு பாலக்கோடு மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்ட நிலையில், உயிரிழந்தவர்களின் உடலை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கேரள முதலமைச்சர் அலுவலகமும் திருப்பூர் ஆட்சியரும் இணைந்து காயப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். 

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த கேரள போக்குவரத்துக் கழக அதிகாரிகள், உயிரிழந்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்துப் பேசிய கேரள போக்குவரத்து அமைச்சர் ஏ.கே.சசீந்திரன், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி  கே.எஸ்.ஆர்.டி.சி நிர்வாக இயக்குநர் அனைத்து தகவல்களையும் அறிக்கையாக சமர்ப்பிப்பார் என்று தெரிவித்துள்ளார்.  மேலும், இந்த விபத்து தொடர்பாக பாலக்கோடு மாவட்ட ஆட்சியருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.