×

கேதார்நாத்தில் தீபாவளி கொண்டாடும் பிரதமர் மோடி

நடப்பாண்டு தீபாவளி பண்டிகையை பிரதமர் மோடி கேதார்நாத்தில் கொண்டாடவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன டெல்லி: நடப்பாண்டு தீபாவளி பண்டிகையை பிரதமர் மோடி கேதார்நாத்தில் கொண்டாடவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தீபாவளி பண்டிகை நாளை மற்றும் நாளை மறுநாள் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நடப்பாண்டு தீபாவளி பண்டிகையை பிரதமர் மோடி கேதார்நாத்தில் கொண்டாடவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கேதார்நாத் கோயிலில் இரண்டு மணி நேரம் பிரதமர் மோடி வழிபாடு செய்து, பின்னர் அங்கு தீபாவளி பண்டியையை
 

நடப்பாண்டு தீபாவளி பண்டிகையை பிரதமர் மோடி கேதார்நாத்தில் கொண்டாடவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன

டெல்லி: நடப்பாண்டு தீபாவளி பண்டிகையை பிரதமர் மோடி கேதார்நாத்தில் கொண்டாடவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீபாவளி பண்டிகை நாளை மற்றும் நாளை மறுநாள் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நடப்பாண்டு தீபாவளி பண்டிகையை பிரதமர் மோடி கேதார்நாத்தில் கொண்டாடவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கேதார்நாத் கோயிலில் இரண்டு மணி நேரம் பிரதமர் மோடி வழிபாடு செய்து, பின்னர் அங்கு தீபாவளி பண்டியையை கொண்டாடுவார் என தெரிகிறது.

முன்னதாக, கடந்த 2014-ஆம் ஆண்டில் பிரதமராக பொறுப்பேற்ற மோடி, 2015-ஆம் ஆண்டில் அமிர்தசரில் ராணுவ வீரர்களுடன்  சேர்ந்து தீபாவளி கொண்டாடினார். 2016-ஆம் ஆண்டு ஹிமாச்சலப் பிரதேசத்திலும், கடந்த 2017-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியான குரேஸ் துறைக்கு சென்று அங்கு படை வீரர்களுடனும் தீபாவளியை கொண்டாடினார்.

இந்நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டில் புயலால் பாதிக்கப்பட்டு பல்வேறு மறு கட்டமைப்பு பணிகள் நடந்து வரும் கேதார்நாத்தில் பிரதமர் மோடி நடப்பாண்டின் தீபாவளி பண்டிகையை கொண்டாடவுள்ளார்.

பிரதமர் மோடி தனது கேதார்நாத் பயணத்தின் போது, அங்கு நடைபெற்று வரும் மறு கட்டமைப்பு பணிகளை ஆய்வு செய்வதுடன், பொதுக் கூட்டம் ஒன்றிலும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.