×

குடியரசு தலைவரின் சபரிமலை பயணம் ரத்து! – காரணம் கூறவில்லை என்கிறது கேரள அரசு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 15ம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதையொட்டி 21ம் தேதி வரை நடை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் வருகிற 5ம் தேதி வர உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஜனாதிபதியின் வருகை குறித்து முன்கூட்டியே தங்களுக்குத் தெரிவிக்கவில்லை என்று கேரள அரசு கூறியதாக சொல்லப்படுகிறது. மிகக் குறைந்த கால அவகாசத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது கடினம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. சபரிமலை
 
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 15ம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதையொட்டி 21ம் தேதி வரை நடை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் வருகிற 5ம் தேதி வர உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஜனாதிபதியின் வருகை குறித்து முன்கூட்டியே தங்களுக்குத் தெரிவிக்கவில்லை என்று கேரள அரசு கூறியதாக சொல்லப்படுகிறது. மிகக் குறைந்த கால அவகாசத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது கடினம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

சபரிமலை மகர விளக்கு பூஜையில் பங்கேற்பதாக இருந்த பயணத்தை குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் ரத்து செய்துவிட்டதாக கேரள அமைச்சர் உறுதி செய்துள்ளார். 
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 15ம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதையொட்டி 21ம் தேதி வரை நடை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் வருகிற 5ம் தேதி வர உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஜனாதிபதியின் வருகை குறித்து முன்கூட்டியே தங்களுக்குத் தெரிவிக்கவில்லை என்று கேரள அரசு கூறியதாக சொல்லப்படுகிறது. மிகக் குறைந்த கால அவகாசத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது கடினம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
மகர ஜோதி காலகட்டத்தில் அதிக அளவிலான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருவார்கள். இந்த நேரத்தில் குடியரசுத் தலைவர் வருகை பக்தர்களுக்கு வீண் அசெளரியத்தை ஏற்படுத்தும் என்றும் கருத்து எழுந்தது. இதனால், கேரளா பயணத்தை ரத்து செய்வதாக குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து கேரள அரசுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இது குறித்து கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனிடம் நிருபர்கள் கேட்டபோது, “குடியரசு தலைவரின் பயணம் ரத்து செய்யப்பட்டது என்ற அறிவிப்பு அரசுக்கு கிடைத்துள்ளது. எதற்காக இந்த பயணம் ரத்து செய்யப்பட்டது என்று கூறவில்லை” என்றார்.