×

குடித்து விட்டு வண்டி ஓட்டினால் இனி கைது – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை: மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலை விபத்தில் காயமடைந்தவர் கூடுதல் இழப்பீடு கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி இனி மது அருந்தி விட்டு போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்வதுடன், அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
 

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாலை விபத்தில் காயமடைந்தவர் கூடுதல் இழப்பீடு கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி இனி மது அருந்தி விட்டு போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்வதுடன், அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும் எனவும், அவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் குறித்த அறிக்கையை மாதந்தோறும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.