×

காவிரிக்காக ரூ.10 ஆயிரம் கோடி வசூல்? கட்டாய நன்கொடை இல்லை என்கிறது ஈஷா!

காவிரியின் கூக்குரல் என்று காவிரி ஆற்றைக் காக்க 639 கி.மீ தொலைவுக்கு மரக் கன்றுகளை நடப்போவதாக ஈஷா அறிவித்தது. இதையொட்டி ஜக்கி வாசுதேவ் மோட்டார் சைக்கிள் பயணமும் மேற்கொண்டார். இவ்வளவு மரங்களையும் மக்கள் அளிக்கும் நன்கொடை மூலம் நட உள்ளதாகவும் மக்கள் ஒரு மரத்துக்கு ரூ.42 அளிக்கலாம் என்று கூறப்பட்டது. காவிரியின் கூக்குரல் திட்டத்திற்காக கட்டாய நன்கொடை வசூலிக்கப்படுகிறது என்று வெளியான தகவலை ஈஷா தரப்பு மறுத்துள்ளது.காவிரியின் கூக்குரல் என்று காவிரி ஆற்றைக் காக்க 639 கி.மீ
 

காவிரியின் கூக்குரல் என்று காவிரி ஆற்றைக் காக்க 639 கி.மீ தொலைவுக்கு மரக் கன்றுகளை நடப்போவதாக ஈஷா அறிவித்தது. இதையொட்டி ஜக்கி வாசுதேவ் மோட்டார் சைக்கிள் பயணமும் மேற்கொண்டார். இவ்வளவு மரங்களையும் மக்கள் அளிக்கும் நன்கொடை மூலம் நட உள்ளதாகவும் மக்கள் ஒரு மரத்துக்கு ரூ.42 அளிக்கலாம் என்று கூறப்பட்டது.

காவிரியின் கூக்குரல் திட்டத்திற்காக கட்டாய நன்கொடை வசூலிக்கப்படுகிறது என்று வெளியான தகவலை ஈஷா தரப்பு மறுத்துள்ளது.காவிரியின் கூக்குரல் என்று காவிரி ஆற்றைக் காக்க 639 கி.மீ தொலைவுக்கு மரக் கன்றுகளை நடப்போவதாக ஈஷா அறிவித்தது. இதையொட்டி ஜக்கி வாசுதேவ் மோட்டார் சைக்கிள் பயணமும் மேற்கொண்டார். இவ்வளவு மரங்களையும் மக்கள் அளிக்கும் நன்கொடை மூலம் நட உள்ளதாகவும் மக்கள் ஒரு மரத்துக்கு ரூ.42 அளிக்கலாம் என்று கூறப்பட்டது. இதற்காக அவர்களது இணையதளத்தில் பணம் செலுத்த தனி பக்கமே ஆரம்பிக்கப்பட்டது. 

ஒரு மரத்துக்கு 42 ரூபாய் என்றால், 639 கி.மீ தூரத்துக்கு எத்தனை கோடி மரங்கள் நடப்படும், அதற்கு எவ்வளவு தேவை என்று கணக்கிட்டுப் பார்த்தால் அது பல ஆயிரம் கோடி ரூபாய்களைத் தாண்டியது. தோராயமாக ரூ.10,626 கோடியை ஈஷா திரட்டுகிறது என்று குற்றம்சாட்டி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த கர்நாடக தலைமை நீதிபதி அபே ஓகா, நீதிபதி ஹேமந்த் சந்திர கௌடர் தலைமையிலான அமர்வு, இவ்வளவு பெரிய அளவில் நிதி திரட்டப்படுகிறது, இது குறித்து நடவடிக்கை எடுக்காத, நன்கொடை எடுப்பதைத் தவிர்க்காத கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், இது குறித்து விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். கர்நாடக அரசுக்கு மட்டுமின்றி ஈஷாவுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிரபல ஊடகம் ஒன்று ஈஷா தரப்பில் விளக்கம் கேட்டது. அப்போது அவர்கள், “இது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு. யாரையும் கட்டாயப்படுத்தி நன்கொடை வசூலிக்கவில்லை. 150-க்கும் மேற்பட்ட மக்கள் தாங்களாக முன்வந்து நிதி உதவி செய்து வருகின்றனர். இவை அனைத்தும் முறையாக பதிவு செய்யப்படுகின்றன. காவிரிக்காக இதை வெளிப்படையாகவே செய்கிறோம். 
காவிரிக் கரையில் அரசுக்கு சொந்தமான இடத்தில் மரக்கன்றுகள் நடப்படாது. தனியார் நிலங்களில் நட திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் விவசாயிகளும் பயன்பெறுவர் கர்நாடக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு எதுவும் எங்களுக்கு வரவில்லை. ஊடகங்களில் வந்த செய்திகளைப் பார்த்தோம். நீதிமன்ற உத்தரவு வந்தால் அது பற்றி நாங்கள் விளக்கம் அளிப்போம்” என்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று நான்கு ஆண்டுகளாக ஒரே இடத்தில் மரக் கன்று நடும் விழா நடந்து வருவதாக சில மாதங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. அரசாங்கம், தொண்டு நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் லட்சக் கணக்கில் மரக் கன்று நடுகின்றன. ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்காக பல கோடி செலவில் அரசு மரக் கன்றுகள் நட்டது. பிரபல நடிகர் ஒரு கோடி மரக்கன்று நடப்போகிறேன் என்றார். இவர்கள் நட்ட செடிகள் எல்லாம் வளர்ந்திருந்தால் இன்றைக்குத் தமிழகம் அமேசான் காடுகளுக்கு சவால் விடும் வகையில் மிகப்பெரிய வனமாக மாறியிருக்கும். 
மரம் நட்டதால் பசுமையா மாறிய பகுதி என்று தமிழகத்தில் சொல்லிக்கொள்ளும் இடம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அப்படி இருக்கும்போது, 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து மரம் நட்டு என்னதான் செய்யப் போகிறார்களோ…