×

காற்று மாசு இல்லை..தெளிவாக தெரியும் இமய மலை.. பஞ்சாப் மக்களுக்கு கிடைத்த அறிய வாய்ப்பு!

உலகின் பல்வேறு இடங்களில் ஊரடங்கால் எல்லா இடங்களிலும், விலங்குகள் பறவைகள் உல்லாசமாக திரிகின்றன. உலகின் பல்வேறு இடங்களில் ஊரடங்கால் எல்லா இடங்களிலும், விலங்குகள் பறவைகள் உல்லாசமாக திரிகின்றன. குறிப்பாக இந்தியாவில் கடந்த 10 நாட்களாக மக்கள் வீட்டிலேயே இருப்பதால், வாகனங்கள் மூலம் காற்று மாசு ஏற்படாமல் இருக்கிறது. சில இடங்களில் வன விலங்குகள் கூட சாலைகளில் சுற்றுகின்றன. இத்தனை நாட்கள் காற்று மாசால் சூழ்ந்திருந்த இயற்கை, தற்போது அதன் உண்மை நிலையை மீட்டுக் கொண்டிருக்கிறது. இதனால் இந்தியா
 

உலகின் பல்வேறு இடங்களில் ஊரடங்கால் எல்லா இடங்களிலும், விலங்குகள் பறவைகள் உல்லாசமாக திரிகின்றன.

உலகின் பல்வேறு இடங்களில் ஊரடங்கால் எல்லா இடங்களிலும், விலங்குகள் பறவைகள் உல்லாசமாக திரிகின்றன. குறிப்பாக இந்தியாவில் கடந்த 10 நாட்களாக மக்கள் வீட்டிலேயே இருப்பதால், வாகனங்கள் மூலம் காற்று மாசு ஏற்படாமல் இருக்கிறது. சில இடங்களில் வன விலங்குகள் கூட சாலைகளில் சுற்றுகின்றன. இத்தனை நாட்கள் காற்று மாசால் சூழ்ந்திருந்த இயற்கை, தற்போது அதன் உண்மை நிலையை மீட்டுக் கொண்டிருக்கிறது. இதனால் இந்தியா முழுவதும் தூய்மையான காற்று வீசுகிறது. 

இந்நிலையில் காற்று மாசு இல்லாததால் பாஞ்சாப் மக்களுக்கு இமயமலையை வீட்டிலிருந்த படியே கண்டு ரசிக்கும் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. பாஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் பகுதியில் வசிக்கும் மக்கள், இமயமலையின் ஒரு பகுதியான தால் ஆதர் மலையை கண்டு ரசிக்கின்றனர்.

கிட்டத்தட்ட 200கி.மீ தூரத்தில் இருக்கும் அந்த மலைத்தொடர், 30ஆண்டுகளுக்கு பிறகு காட்சித் தருவதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். மேலும், ஊரடங்கால் வெளியே செல்ல முடியவில்லை என்றாலும், வீட்டிலேயே இருந்து இயற்கையை ரசிப்பது மகிழ்ச்சி தருவதாகவும் தெரிவித்துள்னர்.