×

காரை ஏற்றி மரத்தை சாய்த்தவருக்கு ரூ.9,500 அபராதம் விதித்த ஐதராபாத் போலீஸ்!

ஐதராபாத்தில் சாலையின் நடுவே சென்டர் மீடியனில் இருந்த மரத்தின் மீது காரை மோதியவருக்கு ரூ.9500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத் சிதிபெட் பகுதியில் சாலையின் நடுவே மரங்கள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. நேற்று மஹிந்திரா சைலோ வாகனம் திடீரென்று சென்டர் மீடியன் தடுப்பில் மோதி, அங்கு வளர்ந்திருந்த மரம் ஒன்றில் மோதியது ஐதராபாத்தில் சாலையின் நடுவே சென்டர் மீடியனில் இருந்த மரத்தின் மீது காரை மோதியவருக்கு ரூ.9500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத் சிதிபெட் பகுதியில் சாலையின் நடுவே மரங்கள்
 

ஐதராபாத்தில் சாலையின் நடுவே சென்டர் மீடியனில் இருந்த மரத்தின் மீது காரை மோதியவருக்கு  ரூ.9500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத் சிதிபெட் பகுதியில் சாலையின் நடுவே மரங்கள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. நேற்று மஹிந்திரா சைலோ வாகனம் திடீரென்று சென்டர் மீடியன் தடுப்பில் மோதி, அங்கு வளர்ந்திருந்த மரம் ஒன்றில் மோதியது

ஐதராபாத்தில் சாலையின் நடுவே சென்டர் மீடியனில் இருந்த மரத்தின் மீது காரை மோதியவருக்கு  ரூ.9500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத் சிதிபெட் பகுதியில் சாலையின் நடுவே மரங்கள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. நேற்று மஹிந்திரா சைலோ வாகனம் திடீரென்று சென்டர் மீடியன் தடுப்பில் மோதி, அங்கு வளர்ந்திருந்த மரம் ஒன்றில் மோதியது. அதில், மரம் முறிந்து விழுந்தது. சிறிய ரக மரம்தானே என்று அவரும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சென்றுவிட்டார். 

ஆனால், மரத்தின் மீது மோதிய நபர் குறித்தும் வாகனம் குறித்தும் ஹரிதா ஹரம் என்ற இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த கார் ஓட்டுநருக்கு ரூ.9,500 அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த ஹரிதா ஹரம் இயக்கம் சார்பில் நாடு முழுவதும் பல லட்சம் மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறதாம். கார் மோதியதில் சாலையில் விழுந்த மரத்தையும் அந்த அமைப்புதான் நட்டு பராமரித்து வருகிறதாம். ஒரு மரத்தை வளர்க்க எவ்வளவு கஷ்டம் என்பதை புரிய வைக்கவே புகார் செய்யப்பட்டதாக அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.