×

காதலர் ஸ்பெஷல்: நீங்க சிங்கிளா இருந்தா உங்களுக்கு டீ இலவசம்; எங்க தெரியுமா?

காதலர் தினத்தன்று சிங்கில்ஸ்களுக்கு இலவசமாக டீ வழங்கப்போவதாக வெளியான அறிவிப்பு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத்: காதலர் தினத்தன்று சிங்கிள்ஸ்களுக்கு இலவசமாக டீ வழங்கப்போவதாக வெளியான அறிவிப்பு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி மாதம் பிறந்ததுமே சட்டென்று நினைவுக்கு வருவது காதலர் தினம்தான். காதலிக்கு பரிசு வாங்கவும், காதலை வெளிப்படுத்தவும் ஏற்ற தருணமாக இளைஞர்கள் இதனைக் கருதுகின்றனர். அதே சமயத்தில் காதலர்களைக் குறித்து நிறுவனங்கள் பல அதிரடி சலுகைகளும் வழங்கி வருகின்றன. இந்நிலையில் இந்த காதலர் தினத்திற்கு அகமதாபாத்திலுள்ள எம்பிஏ
 

காதலர் தினத்தன்று சிங்கில்ஸ்களுக்கு இலவசமாக டீ வழங்கப்போவதாக வெளியான அறிவிப்பு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அகமதாபாத்: காதலர் தினத்தன்று சிங்கிள்ஸ்களுக்கு இலவசமாக டீ வழங்கப்போவதாக வெளியான அறிவிப்பு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிப்ரவரி மாதம் பிறந்ததுமே சட்டென்று நினைவுக்கு வருவது காதலர் தினம்தான். காதலிக்கு பரிசு வாங்கவும், காதலை வெளிப்படுத்தவும் ஏற்ற தருணமாக இளைஞர்கள் இதனைக் கருதுகின்றனர். அதே சமயத்தில் காதலர்களைக் குறித்து நிறுவனங்கள் பல அதிரடி சலுகைகளும் வழங்கி வருகின்றன.

இந்நிலையில் இந்த காதலர் தினத்திற்கு அகமதாபாத்திலுள்ள எம்பிஏ டீ ஸ்டால் ஒரு புது முயற்சியை எடுத்துள்ளது.  இந்த கடையின் உரிமையாளர் பிரபுல் பில்லோர் இந்த காதலர் தினத்தன்று சிங்கிள்ஸ்களுக்கு இலவசமாக டீ வழங்கப்போவதாக பேஸ்புக்கில் ஒரு நிகழ்வாக பதிவிட்டுள்ளார் அதன்படி காதலர் தினம் அன்று மாலை 7 மணி முதல் 10 மணி வரை இந்த இலவச டீ வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், ‘பொதுவாக காதலர் தினம் அன்று அனைத்து கடைகளும் காதலர்களைக் குறிவைத்தே ஏற்பாடுகளை செய்வார்கள். நாங்கள் இதிலிருந்து மாறுபட்டு சிங்கில்ஸ்களும் இந்த நாளை கொண்டாடுவதற்காக இலவச டீயை தரத் திட்டமிட்டோம். ஆனால் யார் சிங்கிள் என்று வரையறுப்பது கடினம்’ என்றார்.