×

கள் பானம் விற்பனை செய்ய தெலுங்கான அரசு அனுமதி !!

தெலுங்கானா மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கள் பானம் விற்பதற்கு தெலுங்கானா அரசு அனுமதி வழங்கியது. சமீபத்தில் தெலுங்கானா அரசு பிறப்பித்த உத்தரவில் கள் பானம் இறக்கவும் விற்பனை செய்யவும் அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் தென்னை, பனை மர விவசாயிகளின் நலன் கருதி கள் பானம் விற்பனை செய்ய தெலுங்கானா அரசு அனுமதி கொடுத்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கள் பானம் விற்பதற்கு தெலுங்கானா அரசு அனுமதி வழங்கியது. சமீபத்தில் தெலுங்கானா அரசு பிறப்பித்த
 

தெலுங்கானா மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கள் பானம் விற்பதற்கு தெலுங்கானா அரசு அனுமதி வழங்கியது. சமீபத்தில் தெலுங்கானா அரசு பிறப்பித்த உத்தரவில் கள் பானம் இறக்கவும் விற்பனை செய்யவும் அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

ஊரடங்கு காலத்தில் தென்னை, பனை மர விவசாயிகளின் நலன் கருதி கள் பானம் விற்பனை செய்ய தெலுங்கானா அரசு அனுமதி கொடுத்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கள் பானம் விற்பதற்கு தெலுங்கானா அரசு அனுமதி வழங்கியது. சமீபத்தில் தெலுங்கானா அரசு பிறப்பித்த உத்தரவில் கள் பானம் இறக்கவும் விற்பனை செய்யவும் அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது. அதே சமயம் சமூக இடைவெளி கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

அதே சமயம் கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்களைத் தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை குறித்து பேசிய கலால் துறை அமைச்சர் வி.சீனிவாஸ் கவுட், மேலும் உத்தரவு வரும் வரை கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள கள் விற்பனை கடைகள் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் கள் இறக்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் இந்த வணிகத்தில் 40 லட்சம் பேர் இருப்பதாகவும், அவர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே மாநிலத்தில் உள்ள கள் இறக்குவோருக்கு உதவ அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என தெரிவித்தார். மேலும் ஹரிதா ஹராமின் கீழ் மழைக்காலத்தில் சுமார் 100 மரக்கன்றுகளை நடவு செய்வதற்கும், மதுபானம் இல்லாத கள் சார்ந்த பானத்தை விற்பனை செய்வதற்காக ஸ்டால்களை அமைப்பதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மேலும் கள் இறக்குவதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதால் அவர்களை போலீசார் துன்புறுத்தக்கூடாது என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.