×

கலவரக்கார்களிடம் இருந்து போலீசைக் காப்பாற்றிய இஸ்லாமியர்!

கான்பூரை அடுத்த ஃபெரோசாபாத்தில் கடந்த 20 -ம் தேதி இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. உத்திரப்பிரதேச காவல்துறையில் பணியாற்றும் அஜய் குமார் என்கிற காவலர் கலகக்காரர்கள் நடுவில் சிக்கிக் கொண்டுவிட அவரை சூழ்ந்துகொண்டு தாக்கியதில் அஜய குமாரின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கான்பூரை அடுத்த ஃபெரோசாபாத்தில் கடந்த 20 -ம் தேதி இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. உத்திரப்பிரதேச காவல்துறையில் பணியாற்றும் அஜய் குமார் என்கிற காவலர் கலகக்காரர்கள் நடுவில் சிக்கிக் கொண்டுவிட அவரை சூழ்ந்துகொண்டு தாக்கியதில்
 

கான்பூரை அடுத்த ஃபெரோசாபாத்தில் கடந்த 20 -ம் தேதி இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. உத்திரப்பிரதேச காவல்துறையில் பணியாற்றும் அஜய் குமார் என்கிற காவலர் கலகக்காரர்கள் நடுவில் சிக்கிக் கொண்டுவிட அவரை சூழ்ந்துகொண்டு தாக்கியதில் அஜய குமாரின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

கான்பூரை அடுத்த ஃபெரோசாபாத்தில் கடந்த 20 -ம் தேதி இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. உத்திரப்பிரதேச காவல்துறையில் பணியாற்றும் அஜய் குமார் என்கிற காவலர் கலகக்காரர்கள் நடுவில் சிக்கிக் கொண்டுவிட அவரை சூழ்ந்துகொண்டு தாக்கியதில் அஜய குமாரின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதைக்கண்ட அந்த பகுதியில் வாழும் ஹாஜி காதிர் என்கிற இஸ்லாமியர் கூட்டத்தில் புகுந்து அஜய குமாரை மீட்டுள்ளார்.தொடர்ந்து அஜயகுமாரை தனது வீட்டுக்கு அழைத்துப் போனார் ஹாஜி காதிர் . அங்கே அஜயகுமாரின் போலீஸ் சீருடையைக் களையச் சொல்லி மாற்று உடை அணியவைத்து , ஆசுவாசப்படுத்தி, அமரவைத்திருந்து கலவரம் ஓய்ந்ததும் அவரை அழைத்துப் போய் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்.

மறுநாள் ஹாஜி காதிர் அஜயகுமாரின் சீருடையைக் கொடுக்க வந்தபோதுதான் இந்த சம்பவம் மற்றவர்களுக்கு தெரிய வந்து இருக்கிறது. இதுபற்றி கூறும்போது, ஒரு காவலரை கூட்டம் தாக்குவதைப் பார்த்ததும் தடுத்து அவரை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டேன்.அதன்பிறகு அவர் பெயரையே கேட்டேன் என்று சொல்லி இருக்கிறார் ஹாஜி காதிர்.

அஜய குமாரின் குடும்பத்தினர் ஹாஜி காதிரை தங்களது வீட்டுக்கு அழைத்து நன்றி தெரிவித்து இருக்கிறார்கள்.அஜய குமாரின் மகள் ஹாஜி காதிருக்கு இனிப்பு கொடுத்தார்.இந்த சம்பவம் பற்றி பேசும்போது ‘ இத்தகைய மனித நேயமிக்க அவருக்கு நான் சல்யுட் செய்கிறேன்’ என்றார் ஆக்ரா ரேஞ்ச் டி.ஐ.ஜி சதீஷ் கனேஷ்.