×

கர்நாடகா இடைத்தேர்தல்: 4 தொகுதிகளில் காங்கிரஸ் – ஜேடிஎஸ் கூட்டணி வெற்றி

கர்நாடக மாநிலத்தில் ஐந்து தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதாதள கட்சி கூட்டணி நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஐந்து தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதாதள கட்சி கூட்டணி நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஷிமோகா, பெல்லாரி, மாண்டியா மக்களவை தொகுதிகள் மற்றும் ராமநகரா, ஜமாகாந்தி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த சனிக்கிழமை இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் – மதசார்பற்ற
 

கர்நாடக மாநிலத்தில் ஐந்து தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதாதள கட்சி கூட்டணி நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஐந்து தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதாதள கட்சி கூட்டணி நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் ஷிமோகா, பெல்லாரி, மாண்டியா மக்களவை தொகுதிகள் மற்றும் ராமநகரா, ஜமாகாந்தி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த சனிக்கிழமை இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து களம் கண்டன. பெல்லாரி, ஜமாகாந்தி ஆகிய இரு தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், ஷிமோகா, மாண்டியா, ராமநகரா ஆகிய தொகுதிகளில் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தின. பாஜக ஐந்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. இந்த தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவில் மொத்தம் 67 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து, தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று எண்ணப்பட்டன. அதில், ராமநகரா சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட அம்மாநில முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமியும், ஜமாகாந்தி சட்டப்பேரவை தொகுதியில் களம் கண்ட காங்கிரஸ் வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.

அதேபோல், பாஜக-வின் கோட்டையாக கருதப்படும் பெல்லாரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சியும், மாண்டியா மக்களவை தொகுதியில் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது.

கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், அம்மாநில பாஜக தலைவருமான எடியூரப்பாவின் மகன் போட்டியிட்ட ஷிமோகா மக்களவை தொகுதியில் மட்டும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி கூட்டணி நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.