×

கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவரை காப்பாற்றிய கடற்படை வீரருக்கு குவியும் பாராட்டுகள்!

எதிர்பாரா விதமாக கடலில் விழுந்த ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை ராகுல் கண்டுள்ளார். உதவி கேட்டு அலறிய அவரை கடற்கரையில் இருந்த ஒருவராலும் காப்பாற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது திருவனந்தபுரம்: கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவரை காப்பாற்றிய கடற்படை வீரருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள குவிந்து வருகிறது. இந்திய கடற்படையை சேர்ந்த லெப்டினன்ட் ராகுல் டலால் தனது மனைவியுடன் கடந்த 5-ம் தேதி கேரளா மாநிலம் Vypeen கடற்கரையில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாரா விதமாக கடலில் விழுந்த
 

எதிர்பாரா விதமாக கடலில் விழுந்த ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை ராகுல் கண்டுள்ளார். உதவி கேட்டு அலறிய அவரை கடற்கரையில் இருந்த ஒருவராலும் காப்பாற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது

திருவனந்தபுரம்: கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவரை காப்பாற்றிய கடற்படை வீரருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள குவிந்து வருகிறது.

இந்திய கடற்படையை சேர்ந்த லெப்டினன்ட் ராகுல் டலால் தனது மனைவியுடன் கடந்த 5-ம் தேதி கேரளா மாநிலம் Vypeen கடற்கரையில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாரா விதமாக கடலில் விழுந்த ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டுள்ளார். உதவி கேட்டு அலறிய அவரை கடற்கரையில் இருந்த ஒருவராலும் காப்பாற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, விரைந்து செயல்பட்ட ராகுல், கடலில் இறங்கி அவரை மீட்டுள்ளார். ஆனால், அவரை கரை சேர்ப்பதற்கு சுமார் 25 நிமிடங்கள் அவர் போராட வேண்டியிருந்தது. ஆற்றொன்னா துயரத்துடனும், உயிர் பயத்தல் பதற்றத்துடனும் இருந்த அவர், ராகுலை நீருக்குள் அமுக்கியுள்ளார். இதனால், இருவரது உயிரும் கேள்விக்குறியாகியுள்ளது. பின்னர், தனது தோள்பட்டையை பிடித்துக் கொள்ளுமாறு அவரிடம் கூறி, தனது முழு பலத்தையும் உபயோகித்து சிலரது உதவியுடன் கரையோயை நோக்கி நீந்தி வந்துள்ளார் ராகுல்.

allowfullscreen

எனினும், மூச்சு விட முடியாமல், நினைவிழந்த நிலையில் இருந்த அவருக்கு, வாயில் விட்டு ஊதுவது, கையை வைத்து மார்பில் அமுக்குவது என்பன உள்ளிட்ட சில முதலுதவிகளை செய்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார்.

இது தொடர்பான தகவலை இந்திய கடற்படை தனது முகநூல் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளது. இந்த பதிவு வைரலானதை அடுத்து, கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவரை காப்பாற்றிய கடற்படை வீரர் ராகுலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இதையும் வாசிங்க

பொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ!