×

கடன்களை வாரி வழங்கிய வள்ளல் ‘எஸ் பேங்க்’ நிறுவனர் ராணா கபூர் – ரூ.54 ஆயிரம் கோடி இழப்பு

எஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூர் ஆடம்பரமான வாழ்க்கை மற்றும் கடன்களை வாரி வழங்கியதால் ரூ.54 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்துள்ளார். டெல்லி: எஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூர் ஆடம்பரமான வாழ்க்கை மற்றும் கடன்களை வாரி வழங்கியதால் ரூ.54 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்துள்ளார். பிரபல தனியார் வங்கியான எஸ் பேங்க் வாராக்கடன், மோசமான நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களால் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. கடந்தாண்டு சுமார் ரூ.1500 கோடி இழப்பை எஸ் பேங்க்
 

எஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூர் ஆடம்பரமான வாழ்க்கை மற்றும் கடன்களை வாரி வழங்கியதால் ரூ.54 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்துள்ளார்.

டெல்லி: எஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூர் ஆடம்பரமான வாழ்க்கை மற்றும் கடன்களை வாரி வழங்கியதால் ரூ.54 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்துள்ளார்.

பிரபல தனியார் வங்கியான எஸ் பேங்க் வாராக்கடன், மோசமான நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களால் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. கடந்தாண்டு சுமார் ரூ.1500 கோடி இழப்பை எஸ் பேங்க் சந்தித்தது. இதையடுத்து நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்த வங்கி நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் ரூ.50ஆயிரம் வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வங்கியில் பணம் வைத்துள்ள வாடிக்கையாளர்கள் பதட்டத்துடன் காணப்படுகின்றனர்.

எஸ் பேங்க் வங்கியின் நிறுவனரும் தலைமை நிர்வாகியாக இருந்தவருமான ராணா கபூர், வருபவர்களுக்கு எல்லாம் இல்லை என்று சொல்லாமல் கடன்களை வாரி வழங்கியதோடு வங்கிப் பணத்தில் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். இதனால் எஸ் வங்கிக்கு சுமார் ரூ.54 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வங்கியில் சிறப்பாக செயல்பட்டவர்கள் என்று கூறி உயர் அதிகாரிகளுக்கு விருதுகளை வழங்குவது, மும்பையில் உள்ள ஆடம்பர வீட்டில் பிரம்மாண்ட விருந்துகள் அளிப்பது என்று சரமாரியாக செலவு செய்திருக்கிறார். மற்ற வங்கிகளால் கடன் மறுக்கப்பட்ட பல நிறுவனங்களுக்கு கடன்களை ராணா கபூர் வாரி இறைத்துள்ளார்.