×

கஜாவுக்கு வராத பிரதமர்…. சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அந்தமானில் அஞ்சலி

சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அந்தமானில் அஞ்சலி செலுத்தினார். கார் நிக்கோபார்: 2004-ம் ஆண்டு சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அந்தமானில் அஞ்சலி செலுத்தினார். கஜா புயலால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் சின்னாபின்னமாகியுள்ளன. ஆனால் பிரதமர் நரேந்திர மோடியோ இதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வரவில்லை. இதனால் அவர் மீது ஒட்டுமொத்த தமிழகமுமே அதிருப்தியில் இருக்கிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அந்தமான் மற்றும் நிகோபார்
 

சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அந்தமானில் அஞ்சலி செலுத்தினார்.

கார் நிக்கோபார்: 2004-ம் ஆண்டு சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அந்தமானில் அஞ்சலி செலுத்தினார்.

கஜா புயலால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் சின்னாபின்னமாகியுள்ளன. ஆனால் பிரதமர் நரேந்திர மோடியோ இதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வரவில்லை. இதனால் அவர் மீது ஒட்டுமொத்த தமிழகமுமே அதிருப்தியில் இருக்கிறது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அந்தமான் மற்றும் நிகோபார் தீவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக அவர், கார் நிகோபர் பகுதிக்கு சென்றார். அங்கு கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் உயிரிழந்தவர்கள் நினைவாக கட்டப்பட்டிருக்கும் சுனாமி நினைவகத்தில் மலரஞ்சலி செலுத்தி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.

உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது ஒன்றும் மோசமான விஷயம் இல்லை. ஆனால் அதே மனிதாபிமானத்தை, கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கும் பிரதமர் காண்பித்திருக்கலாம் என சமூக வலைதளவாசிகள் உட்பட பலர் கூறி வருகின்றனர்.