×

ஓய்வுக்கு பின் பாஜகவில் இணைகிறார் தோனி?!: மூத்த பாஜக தலைவர் உறுதி!

அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பப்படும் தோனி போன்ற ஆளுமையை பாஜகவில் இணைத்துக் கொள்வதன் மூலம் அக்கட்சியின் செல்வாக்கு மேலும் உயரும் ஓய்வுக்குப் பிறகு தோனி பாஜகவில் இணைவார் என பாஜகவைச் சேர்ந்த மத்திய முன்னாள் அமைச்சர் சஞ்சய் பஸ்வான் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது. இருப்பினும் அரை சதம் அடித்து கடைசியாகப் போராடிய தோனிக்கு ஆதரவாக #ThankYouMSD என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது. அத்துடன் சிலர்
 

அனைத்து  தரப்பு மக்களாலும் விரும்பப்படும்  தோனி  போன்ற ஆளுமையை பாஜகவில் இணைத்துக் கொள்வதன் மூலம் அக்கட்சியின் செல்வாக்கு மேலும் உயரும்

ஓய்வுக்குப் பிறகு தோனி பாஜகவில் இணைவார் என பாஜகவைச் சேர்ந்த மத்திய முன்னாள் அமைச்சர் சஞ்சய் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது. இருப்பினும் அரை சதம் அடித்து கடைசியாகப் போராடிய தோனிக்கு ஆதரவாக  #ThankYouMSD என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது.   அத்துடன் சிலர் அவரின் ஓய்வு குறித்தும் செய்திகள் வெளியாகின. அதே சமயம் தோனி  அரசியலில் களமிறங்கி ஜார்க்கண்ட்  சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் சமூகவலைதளங்களில்  செய்திகள்  வேகமாக பரவி வருகிறது. 

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற பின் தோனி பாஜகவின் இணைவார் என முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான சஞ்சய் பஸ்வான் தெரிவித்துள்ளார். பாஜகவில் இணைவது குறித்து தோனி நீண்டகாலமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் இதுகுறித்து எந்தவொரு  அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. அனைத்து  தரப்பு மக்களாலும் விரும்பப்படும்  தோனி  போன்ற ஆளுமையை பாஜகவில் இணைத்துக் கொள்வதன் மூலம் அக்கட்சியின் செல்வாக்கு மேலும் உயரும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.