×

ஓமன் சுல்தான் மறைவுக்கு நாளை அரசுமுறை துக்கம் அனுசரிப்பு !

அரேபிய வரலாற்றில் நீண்ட காலமாக அதாவது 49 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர் சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத். அரேபிய வரலாற்றில் நீண்ட காலமாக அதாவது 49 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர் சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத். இவர் பல ஆண்டுகளாக உடல் நலக்குறைபாட்டிற்காகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு உலக தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர். அதே போல, பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியாவுக்கும் ஓமனுக்கும்
 

அரேபிய வரலாற்றில் நீண்ட காலமாக அதாவது 49 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர் சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத்.

அரேபிய வரலாற்றில் நீண்ட காலமாக அதாவது 49 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர் சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத். இவர் பல ஆண்டுகளாக உடல் நலக்குறைபாட்டிற்காகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு உலக தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர். அதே போல, பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியாவுக்கும் ஓமனுக்கும் இடையேயான நட்புணர்வை வளர்க்க வலுவான தலைமையை வழங்கினார் . சுல்தான் காபூஸ். இந்தியாவின் உண்மையான நண்பராகவும் இருந்தார்” என்று ஓமன் சுல்தான் மறைவுக்குத் தனது இரங்கலைத் தெரிவித்தார்.

இந்நிலையில், ஓமன் சுல்தான் மறைவுக்கு நாளை அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓமன் சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத் மறைவுக்கு நாளை அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும். தேசிய கோடி அறைக் கம்பத்தில் பறக்க விடப்படும். நாளைய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளது.