×

ஓடும் ரயிலில் பிரசவ வலி…ஓடி சென்று மருத்துவம் பார்த்த ராணுவ மருத்துவர்கள்!

அடுத்த ஸ்டேஷனை அடைய நேரம் எடுக்கும் என்பதால் அந்த பெண்ணின் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று நிறைமாத கர்ப்பிணிப் பெண் பயணம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு திடீரென பிரசவவலி வந்தது. டெல்லியில் பனிமூட்டம் என்பதால் ரயில்கள் மெதுவாகவே சென்றது. இதனால் அடுத்த ஸ்டேஷனை அடைய நேரம் எடுக்கும் என்பதால் அந்த பெண்ணின் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த ரயிலில் ராணுவ மருத்துவர்களான கேப்டன் லலிதா, கேப்டன் அமன்தீப்
 

அடுத்த ஸ்டேஷனை அடைய நேரம் எடுக்கும் என்பதால் அந்த பெண்ணின் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். 

ஹவுரா எக்ஸ்பிரஸ்  ரயிலில் நேற்று நிறைமாத கர்ப்பிணிப் பெண் பயணம்  மேற்கொண்டார். அப்போது அவருக்கு திடீரென பிரசவவலி  வந்தது. டெல்லியில் பனிமூட்டம் என்பதால் ரயில்கள் மெதுவாகவே சென்றது. இதனால் அடுத்த ஸ்டேஷனை அடைய நேரம் எடுக்கும் என்பதால் அந்த பெண்ணின் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். 

ஆனால்  அதிர்ஷ்டவசமாக அந்த ரயிலில் ராணுவ மருத்துவர்களான கேப்டன் லலிதா, கேப்டன் அமன்தீப் இருவரும் பயணம் செய்துள்ளனர். அவர்கள் இருவருக்கும் இந்தத் தகவல் கிடைக்க உடனடியாகப் பிரசவம் பார்ப்பதற்கான பணிகளை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து அந்த பெண்ணுக்கு ஓடும் ரயிலிலேயே குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளார்களாம். 

இதுகுறித்து இந்திய ராணுவம் தங்கள் டிவிட்டர் பக்கத்தில், பெண் மருத்துவர்களைப் பாராட்டிப் பதிவிட்டுள்ளது.  மேலும் பலரும் அவர்களை பாராட்டி மகிழ்கின்றனர்.