×

ஒரே வாரத்தில் எகிறிய டிக்கெட் விலை!  தனியார் மயமான ரயில் சேவை!

ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு பலகாலங்களாக தொடர்ந்து வந்துக் கொண்டே இருந்த நிலையில், நாட்டின் சில முக்கியமான வழித்தடங்களில் மட்டும் சோதனை முயற்சியாக தனியாருக்கு விடும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு பலகாலங்களாக தொடர்ந்து வந்துக் கொண்டே இருந்த நிலையில், நாட்டின் சில முக்கியமான வழித்தடங்களில் மட்டும் சோதனை முயற்சியாக தனியாருக்கு விடும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு. அதன் முதல் கட்டமாக டெல்லி- லக்னோ இடையேயான வழித்தடத்தில்
 

ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு பலகாலங்களாக தொடர்ந்து வந்துக் கொண்டே இருந்த நிலையில், நாட்டின் சில முக்கியமான வழித்தடங்களில் மட்டும் சோதனை முயற்சியாக தனியாருக்கு விடும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு

ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு பலகாலங்களாக தொடர்ந்து வந்துக் கொண்டே இருந்த நிலையில், நாட்டின் சில முக்கியமான வழித்தடங்களில் மட்டும் சோதனை முயற்சியாக தனியாருக்கு விடும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு. அதன் முதல் கட்டமாக டெல்லி- லக்னோ இடையேயான வழித்தடத்தில் தனியார் ரயில் சேவை கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வழிதடத்தில் அறிமுகமான ஒரே வாரத்திலேயே பயணத்துக்கான கட்டணத்தை கடுமையாக உயர்த்தியிருப்பது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இத்தனைக்கும் 1989ம் ஆண்டு ரயில்வே சட்டப்படி ரயில் கட்டணங்களை மத்திய அரசு மட்டுமே நிர்ணயிக்க முடியும். ஐஆர்சிடிசியால் கூட ரயில் கட்டணங்களை தன்னிச்சையாக தீர்மானிக்க முடியாது. இப்படி ரயில் கட்டண முறையில் கடுமையான சட்டங்கள் அமலில் இருக்கும் போதே  தனியார் ரயிலில், அதே பாதையில் இயக்கப்படும் சதாப்தி  எக்ஸ்பிரஸை காட்டிலும் 3ல் ஒரு பங்கு அதிக கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

தற்போது அந்த பாதையில் இயங்கி வரும் சதாப்தி ரயிலில் ஏசி எக்ஸ்கியூடிவ்  வகுப்புக்கு ரூ.1,855 வசூலிக்கப்படுகிறது. இதே வகுப்பு பயணத்திற்கு தனியார் ரயிலில் ரூ.2,450 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்துடன் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் கிடையாது என்பன போன்ற ரயில்வே சலுகைகள் எல்லாம் தனியார் ரயிலில் புறக்கணிக்கப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில் மேலும் 150 ரயில்களையும் 50 ரயில் நிலையங்களையும் தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு உயர்மட்டக்குழு அமைத்திருப்பது மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.