×

ஒரே நாளில் 81 ஆயிரம் பேர் குணமடைந்தனர் – இந்தியாவில் கொரோனா

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 27 லட்சத்து 65 ஆயிரத்து 204 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 41 லட்சத்து 83 ஆயிரத்து 346 நபர்கள். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 9 லட்சத்து 93 ஆயிரத்து 463 பேர். இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள். கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால்,
 

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 27 லட்சத்து  65 ஆயிரத்து 204 பேர்.    

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 41 லட்சத்து 83 ஆயிரத்து 346 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 9 லட்சத்து 93 ஆயிரத்து 463 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள். 

கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால், இங்கு இறப்பு விகிதம் குறைவாகவும் விரைவில் குணவடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருப்பது ஆறுதல் அளிக்கும் செய்தியாகும்.

இந்தியாவில்  தினசரி கொவிட் பரிசோதனை  சுமார் 15 லட்சத்தை எட்டியுள்ள நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிக்கிறது.

இதுவரை மொத்தம் 47.5 லட்சத்துக்கும் (47, 56, 164) மேற்பட்ட கொவிட் நோயாளிகள் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 81,177 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். 

சிகிச்சை பெறுபவர்களை விட (9,70,116) குணமடைந்தவர்கள் (37,86,048) சுமார் 38 லட்சம் பேர் இன்று அதிகம் உள்ளனர்.

புதிதாக தொற்று ஏற்பட்டவர்களில், 73% பேர் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தமிழகம், உத்தரப் பிரதேசம், ஒடிசா, தில்லி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் 86,052 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில், 1,141 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இவர்களில் 83% பேர் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரசேத்தை சேர்ந்தவர்கள்.