×

ஒரே குடும்பத்தில் 181 உறுப்பினர்கள்….. உலகிலேயே பெரிய குடும்பம் இதுதான்

உலகிலேயே 181 உறுப்பினர்களை கொண்ட மிகப்பெரிய குடும்பம் என்ற பெருமையை மிசோரம் மாநிலத்தில் ஜியோனா சானா என்பவரது குடும்பம் பெற்றுள்ளது. மிசோரம்: உலகிலேயே 181 உறுப்பினர்களை கொண்ட மிகப்பெரிய குடும்பம் என்ற பெருமையை மிசோரம் மாநிலத்தில் ஜியோனா சானா என்பவரது குடும்பம் பெற்றுள்ளது. உலகம் தற்போது மிக வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் குடும்பத்தில் இருப்பவர்கள் பொருளாதாரத்தை சேர்க்க வேண்டும் என உலகின் பல்வேறு பகுதிகளில் பிரிந்து இருக்கிறார்கள். வருடத்திற்கு ஒரு முறையோ இல்லை பண்டிகைகளுக்கோ, இல்லை சுக, துக்க
 

உலகிலேயே 181 உறுப்பினர்களை கொண்ட மிகப்பெரிய குடும்பம் என்ற பெருமையை மிசோரம் மாநிலத்தில் ஜியோனா சானா என்பவரது குடும்பம் பெற்றுள்ளது.

மிசோரம்: உலகிலேயே 181 உறுப்பினர்களை கொண்ட மிகப்பெரிய குடும்பம் என்ற பெருமையை மிசோரம் மாநிலத்தில் ஜியோனா சானா என்பவரது குடும்பம் பெற்றுள்ளது.

உலகம் தற்போது மிக வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் குடும்பத்தில் இருப்பவர்கள் பொருளாதாரத்தை சேர்க்க வேண்டும் என உலகின் பல்வேறு பகுதிகளில் பிரிந்து இருக்கிறார்கள். வருடத்திற்கு ஒரு முறையோ இல்லை பண்டிகைகளுக்கோ, இல்லை சுக, துக்க நிகழ்வுகளில்தான் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று கூடும் வழக்கம் தற்போது நடைமுறையில் உள்ளது. 

அதனையும் மீறி ஒன்றிரண்டு குடும்பங்கள் கூட்டுக்குடும்பமாக வாழந்தாலும் பல்வேறு சச்சரவுகளும் வருகின்றன. கூட்டுக்குடும்ப கலாசாரம் ஒழிந்து தற்போதெல்லாம் அப்பார்ட்மெண்ட் கலாசாரம் தழைத்தோங்கியுள்ளது.

இந்நிலையில் மிசோரம் மாநிலம் பக்தாவங் என்ற பகுதியில் ஜியோனா சானா என்பவரது குடும்பம் 181 உறுப்பினர்களை கொண்டு ஒற்றுமையாக இருந்துவருகிறது. ஜியோனாவுக்கு மொத்தம் 39 மனைவிகள் ஆவர். அவர்களுக்கு 94 குழுந்தைகள் இருக்கின்றனர். இதனையடுத்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்ததன் மூலம் ஜியோனாவுக்கு 14 மருமகள்கள், 39 பேரன் பேத்திகள் இருக்கின்றனர்.

இது ஒரு ஆச்சரியம் என்றால் அதை மிஞ்சம் ஆச்சரியமாக இவர்கள் 181 பேரும் ஒரே குடியிருப்பில், அதாவது நான்கு அடுக்கு மாடிகளில் 100 அறைகள் கொண்ட குடியிருப்பில் எவ்வித சண்டை, சச்சரவும் இல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள்.