×

“ஒன்றரை வயது மகனை தூக்கி கொண்டு 100 கிமீ நடைபயணம்: 8 நாட்களில் நடந்து தாய் வீட்டை அடைந்த விதவை பெண்!

ஆண் குழந்தையுடன் ஜார்ஹட் மாவட்டத்தில் உள்ள ஹெம்லாய் என்ற கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் செல்ல நினைத்து நடக்க துவங்கியுள்ளார். கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. இதை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மாதம் இறுதியில் நாடு முழுவதும் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி போயுள்ளனர். மேலும் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். அந்த வகையில் அசாம் மாநிலம், கோலாகட் மாவட்டம்
 

ஆண் குழந்தையுடன் ஜார்ஹட் மாவட்டத்தில்  உள்ள ஹெம்லாய் என்ற கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் செல்ல நினைத்து நடக்க துவங்கியுள்ளார். 

கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. இதை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மாதம் இறுதியில் நாடு முழுவதும் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.  இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி போயுள்ளனர். மேலும் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். 

அந்த வகையில் அசாம் மாநிலம், கோலாகட் மாவட்டம் சருபதர் பகுதியை சேர்ந்த அஞ்சனா கோகாய் என்ற  25 வயது விதவை பெண் தனது ஒன்றரை வயது  ஆண் குழந்தையுடன் ஜார்ஹட் மாவட்டத்தில்  உள்ள ஹெம்லாய் என்ற கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் செல்ல நினைத்து நடக்க துவங்கியுள்ளார். 

குழந்தையை தோளில் தூக்கி கொண்டு 8 நாட்களில் 100 கிமீ கடந்து  தனது வீட்டை அடைந்துள்ளார். ரயில் டவுன்ஷிப்பின் புறநகரில் உள்ள நேத்துன்மதி பகுதியில்  போலீசார் அவரை மீட்டு   நிவாரணம் அளித்து வீட்டிற்கு கொண்டு சென்று விட்டனர்.

மாமியாரால் சரியாக நடத்தப்படவில்லை என்ற காரணத்தால் அந்த பெண் வீட்டை விட்டு வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.