×

ஒடிஷாவில் குழந்தைத் திருமணத்தைத் தடுக்க பரிசுத் திட்டம்!

ஒடிஷாவில் குழந்தைத் திருமணம் பற்றி தகவல் தெரிவித்தால் அவர்களுக்கு ரூ.5000ம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் வளர்ந்துவிட்டதாக பிரசாரம் செய்யப்படும் வட மாநிலங்களில் இன்னும் குழந்தைத் திருமணம் உள்ளிட்ட சமூக பிரச்னைகள் இருந்துகொண்டேதான் இருக்கிறது. அந்த வகையில், ஒடிஷா மாநிலத்தில் குழந்தைத் திருமணம் பற்றிய தகவல் தெரிவித்தால் பரிசு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிஷா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் இந்த புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தகவல் தெரிவிப்பவர்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு
 

ஒடிஷாவில் குழந்தைத் திருமணம் பற்றி தகவல் தெரிவித்தால் அவர்களுக்கு ரூ.5000ம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் வளர்ந்துவிட்டதாக பிரசாரம் செய்யப்படும் வட மாநிலங்களில் இன்னும் குழந்தைத் திருமணம் உள்ளிட்ட சமூக பிரச்னைகள் இருந்துகொண்டேதான் இருக்கிறது. அந்த வகையில், ஒடிஷா மாநிலத்தில் குழந்தைத் திருமணம் பற்றிய தகவல் தெரிவித்தால் பரிசு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிஷா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் இந்த புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தகவல் தெரிவிப்பவர்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய நிதியிலிருந்து அவர்களுக்கு ரூ.5000 வழங்குவது என்று கடந்த வாரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருமணம் பற்றிய தகவல் தெரிவிப்பவர்கள் பற்றி ரகசியம் காக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.
இது குறித்து கஞ்சம் கலெக்டர் விஜய் அம்ருதா குலான்ஜி கூறுகையில், “கஞ்சம் மாவட்ட நிர்வாகத்துடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இணைந்து குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்தி வருகின்றன.

நடப்பு ஆண்டில் மட்டும் 38 குழந்தைத் திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கிராமப் பகுதிகளில் குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்றன. புகார் அளித்தால் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துவிடுவார்கள் என்ற பயத்தில் பலரும் புகார் அளிக்க தயங்குகின்றனர். 
குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும், தற்போது பரிசு தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று நம்புகிறோம்” என்றார்.