×

ஏழைகளுக்கு உணவு அளிப்பதற்காக நிலத்தை விற்று கிடைத்த ரூ.25 லட்சத்தை செலவிடும் கர்நாடக சகோதரர்கள்…

கர்நாடகாவில் இஸ்லாமிய சகோதாரர்கள் இருவர் ஏழைகளுக்கு உணவு அளிப்பதற்காக தங்களது நிலத்தை விற்று கிடைத்த ரூ.25 லட்சத்தை செலவிடுகின்றனர். சக மனிதர்களின் துயரத்தை போக்க சாதியும், மதமும் ஒரு போதும் தடையாக இருக்காது என்பதை இது உணர்த்தியுள்ளது கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகாவில் உள்ள முகமதுபூர் கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் தாஜமுல் பாஷா மற்றும் முசாமில் பாஷா. பாஷா சகோதரர்கள் தங்களது பெற்றோர் இறந்தபிறகு அங்கியிருந்து தங்களது பாட்டியுடன் கோலார் வீட்டு வசதி குடியிருப்புக்கு
 

கர்நாடகாவில் இஸ்லாமிய சகோதாரர்கள் இருவர் ஏழைகளுக்கு உணவு அளிப்பதற்காக தங்களது நிலத்தை விற்று கிடைத்த ரூ.25 லட்சத்தை செலவிடுகின்றனர். சக மனிதர்களின் துயரத்தை போக்க சாதியும், மதமும் ஒரு போதும் தடையாக இருக்காது என்பதை இது உணர்த்தியுள்ளது

கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர்  மாவட்டம் சிந்தாமணி தாலுகாவில் உள்ள முகமதுபூர் கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் தாஜமுல் பாஷா மற்றும் முசாமில் பாஷா. பாஷா சகோதரர்கள் தங்களது பெற்றோர் இறந்தபிறகு அங்கியிருந்து தங்களது பாட்டியுடன் கோலார் வீட்டு வசதி குடியிருப்புக்கு வந்தனர். லாக்டவுனால் வசதி இல்லாதவர்கள் உணவுக்காக சிரமப்படுவது பாஷா சகோதரர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

இதனால் நம்மால் முடிந்த உதவி அவர்களுக்கு செய்ய வேண்டும் என பாஷா சகோதரர்கள் முடிவு செய்தனர். இதனையடுத்து தங்களுக்கு சொந்தமாக இருந்த நிலத்தை விற்று ரூ.25 லட்சத்தை திரட்டினர். பின் அந்த பகுதியில் உள்ள வசதி இல்லாத மற்றும் தேவை உள்ள மக்களுக்காக பல சரக்குகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்கி, தேவைப்படும் மக்களின் வீடுகளுக்கு சென்று வழங்கி வருகின்றனர். பாஷா சகோதரர்களின் இந்த நடவடிக்கைகளை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக தஜாமுல் பாஷா கூறுகையில், கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் தனிமை மிகவும் முக்கியமானது. ஏழை மக்கள் உணவு கிடைக்காவிட்டால் வெளியில் இறங்குகிறார்கள். மளிகை சாமான்கள் மற்றும் உணவை அவர்களின் வீட்டு வாசலில் வழங்குவதே அவர்களை தங்கள் வீடுகளுக்குள் வைத்திருக்க சிறந்த வழி. முன்பு கவுரிபேட்டையில் மஸ்ஜித் அருகே ஒரு கனிவான மனிதர் எங்களுக்கு ஒரு வீட்டை கொடுத்தார். இந்துக்கள்,முஸ்லிம்கள் ஒரு சீக்கிய குடும்பம் மற்றும் பலர் அந்த நாட்களில் எங்களுக்கு உணவை கொடுத்தார்கள். மதமும் சாதியும் ஒரு போதும் தடையாக இருக்கவில்லை என தெரிவித்தார். ஒவ்வொரு குடும்பமும் தினமும் 3 வேளையும் உணவு சாப்பிடுவதை உறுதி செய்ய இந்த சகோதரர்கள் விரும்புகின்றனர்.