×

ஏழரை வயது நாயின் இதயத்தில் பேஸ்மேக்கர் கருவி – இந்தியாவில் இதுதான் முதன்முறை!

இந்தியாவிலேயே முதன்முறையாக நாய் ஒன்றின் இதயத்தில் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. டெல்லி: இந்தியாவிலேயே முதன்முறையாக நாய் ஒன்றின் இதயத்தில் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. டெல்லியில் ஏழரை வயது கொண்ட காக்கர் ஸ்பானியல் வகை நாயின் இதயத்தில் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு நாயின் இதயத்தில் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்படுவது இதுதான் முதன்முறை ஆகும் என்று கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்தனர். டெல்லியின் குர்கான் பகுதியில் வசித்து வரும் மானு என்பவர் குஷி என்ற நாயை வளர்த்து
 

இந்தியாவிலேயே முதன்முறையாக நாய் ஒன்றின் இதயத்தில் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

டெல்லி: இந்தியாவிலேயே முதன்முறையாக நாய் ஒன்றின் இதயத்தில் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் ஏழரை வயது கொண்ட காக்கர் ஸ்பானியல் வகை நாயின் இதயத்தில் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு நாயின் இதயத்தில் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்படுவது இதுதான் முதன்முறை ஆகும் என்று கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்தனர். டெல்லியின் குர்கான் பகுதியில் வசித்து வரும் மானு என்பவர் குஷி என்ற நாயை வளர்த்து வருகிறார். இந்த நாயை கடந்தாண்டு காது அறுவை சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது செய்த பரிசோதனையில், குஷி நாய்க்கு இதய பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

வழக்கமாக நாய்களுக்கு நிமிடத்திற்கு 60 முதல் 120 வரை இதயம் துடிக்க வேண்டும். ஆனால் குஷிக்கு 20 முறைதான் இதயம் துடித்தது. அதன் இதயத்தில் அடைப்பு ஏற்பட்டிருந்ததால் இவ்வாறு இதயம் குறைவாக துடித்தது. இதனால் நாய்க்கு அறுவை சிகிச்சை மூலம் அதன் இதயத்தில் பேஸ்மேக்கர் கருவி பொருத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது குஷிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.