×

எல்லையில் குவிக்கப்பட்டுள்ள ராணுவம்..! சுதந்திர தினத்தை டார்கெட் செய்யும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள்!!

பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் 15 பேர் இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் எல்லையில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டிருப்பதாக ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் 15 பேர் இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் எல்லையில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டிருப்பதாக ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. நாட்டின் சுதந்திர தினம் வரும் 15ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் அதை சீர்குலைப்பதற்கான சதித் திட்டத்தில்
 

பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் 15 பேர் இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் எல்லையில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டிருப்பதாக ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. 

பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் 15 பேர் இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் எல்லையில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டிருப்பதாக ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. 

நாட்டின் சுதந்திர தினம் வரும் 15ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் அதை சீர்குலைப்பதற்கான சதித் திட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், அமர்நாத்துக்கு  புனித யாத்திரை செல்வோர் மீதும் பயங்கரவாதிகள் குறி வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பகுதியில் பயங்கரவாத பயிற்சி பெற்ற 15 பேர் காஷ்மீர் எல்லையொட்டிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுடன் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத தலைவர் மசூத் அசாரின் சகோதரர் இப்ராஹிம் அசாரும் உடனிருப்பதாக தெரியவந்துள்ளது.  இதைத் தொடர்ந்து பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகளை முறியடிப்பதற்காக ராணுவமும், விமானப்படையும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.