×

என்னால் யாருக்காவது கொரோனா வந்துவிடுமோ என அச்சமாக உள்ளது! கொரோனாவிலிருந்து மீண்டுவந்த இளைஞரின் கண்ணீர் குரல்

தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர், 24 வயது இளைஞர் தனது கொரோனா அனுபவத்தை வெளியிட்டுள்ளார். தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர், 24 வயது இளைஞர் தனது கொரோனா அனுபவத்தை வெளியிட்டுள்ளார். பிப்ரவரி மாத நடுவில் துபாய் சென்றிருந்த அவர் அதே மாதம் 20ஆம் தேதி பெங்களூரு திரும்பி மறுநாள் அலுவலகத்துக்கு சென்றிருக்கிறார். அடுத்த நாள் ஏசி பேருந்தில் ஐதராபாத் திரும்பியுள்ளார். அதேநாளில் அவருக்கு காய்ச்சல் ஏற்படவே, குடும்ப மருத்துவரிடம்
 

தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர், 24 வயது இளைஞர் தனது கொரோனா அனுபவத்தை வெளியிட்டுள்ளார். 

தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர், 24 வயது இளைஞர் தனது கொரோனா அனுபவத்தை வெளியிட்டுள்ளார். 

பிப்ரவரி மாத நடுவில் துபாய் சென்றிருந்த அவர் அதே மாதம் 20ஆம் தேதி பெங்களூரு திரும்பி மறுநாள் அலுவலகத்துக்கு சென்றிருக்கிறார். அடுத்த நாள் ஏசி பேருந்தில் ஐதராபாத் திரும்பியுள்ளார். அதேநாளில் அவருக்கு காய்ச்சல் ஏற்படவே, குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுள்ளார். 4 நாட்களுக்குப் பிறகு தொடர் இருமல், சளி இருந்ததால் பரிசோதித்தபோது நிமோனியா இருந்துள்ளது. ஐதராபாத் காந்தி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞருக்கு மார்ச் 1ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானது.

கொரோனா தொற்று உறுதியானதும் அதிர்ந்ததாக கூறியுள்ள அவர், தனது பெற்றோர், நண்பர்கள், சகஊழியர்களுக்கும் தொற்றி இருக்குமோ என கவலை அடைந்ததாக கூறுகிறார். இளைஞர் என்பதால் விரைவில் குணமடைவீர்கள் என மருத்துவர்கள், செவிலியர்கள் தனக்கு தைரியம் அளித்து வந்ததாக கூறும் அவர், தனியறையில் 28 நாட்களைக் கழித்தது புதிய உலகம் என்கிறார். அரசு மருத்துவமனை என்றால் அனைவருக்கும் உள்ள தவறான புரிதலை இந்த 28 நாள்கள் தன்மனதில் மாற்றி விட்டதாகக் கூறும் இளைஞர், மருந்து, உணவு கொடுப்பதற்காக செவிலியர்கள் முழு கவச உடையில் தனது அறைக்கு வந்ததாகக் கூறுகிறார். 
செவிலியர்கள் தன்னுடன் தேநீர் அருந்தியாக கூறும் அவர், வீட்டில் இருந்து பெற்றோர், உறவினர்கள் தன்னுடன் செல்ஃபோனில் பேசியபடி பொழுதைக் கழித்ததாகக் கூறுகிறார். சமூக வலைத்தளத்தில் இருந்து விலகியிருந்ததாகவும் 10க்கும் மேற்பட்ட புத்தகங்களை வாசித்ததாகவும் கூறும் இளைஞர், மார்ச் 13 மற்றும் 14 தேதிகளில் இருமுறை பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று உறுதியான பிறகு வீட்டில் தனியறைக்கு மாற்றப்பட்டதாகக் கூறுகிறார்.

கொரோனா தொற்று யாருடைய தவறுமல்ல என்றும், அதேநேரம் வேறு யாருக்காவது தன்னால் பரவியிருக்குமோ என்ற குற்ற உணர்வு இருப்பதாகவும் ஐதராபாத் இளைஞர் கூறியுள்ளார். அரசு மருத்துவமனைகளை குறைத்து மதிப்பிடக்கூடாது என்று அறிந்ததாகக் கூறும் இளைஞர், இரண்டு வாரங்கள் தனித்திருப்பதன் மூலம் கொரோனாவை ஒட்டுமொத்த சமூகமும் இணைந்து ஒழிக்க முடியும் என்கிறார்.

அரசு மருத்துவமனை மீதான எண்ணம் மாறியதாகக் கருத்து
“செவிலியர்கள் தன்னுடன் தேநீர் அருந்தினர், மருத்துவர்கள் தைரியமளித்தனர்”
“10க்கும் மேற்பட்ட புத்தகங்கள் படித்தேன், ஃபோனில் பேசினேன்”
“தனித்திருத்தல் மூலமே கொரோனாவை ஒழிக்க முடியும்”