×

‘என் மகளை எரித்து கொன்றவர்களை சுட்டு தள்ள வேண்டும்’…உன்னாவ் பாலியல் வன்கொடுமையில் பலியான பெண்ணின் தந்தை கதறல்!

இருவரின் ஒருவர் கைதாகி ஜாமீனில் வெளிவர மற்றொருவர் இதுவரை கைது செய்யப்படவில்லை. உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளம்பெண் ஒருவர் தனது காதலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு தனது நண்பர்களின் விருப்பத்திற்கும் உடன்பட கட்டாயப்படுத்தியுள்ளார். இதை படம்பிடித்து வைத்து கொண்டு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து அந்த பெண் கடந்த மார்ச் மாதம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றம்சாட்டப்பட்ட இருவரின் ஒருவர் கைதாகி ஜாமீனில் வெளிவர
 

இருவரின் ஒருவர் கைதாகி  ஜாமீனில் வெளிவர மற்றொருவர் இதுவரை கைது செய்யப்படவில்லை. 

உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளம்பெண் ஒருவர் தனது காதலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு தனது நண்பர்களின் விருப்பத்திற்கும் உடன்பட கட்டாயப்படுத்தியுள்ளார். இதை படம்பிடித்து வைத்து கொண்டு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து அந்த பெண் கடந்த மார்ச் மாதம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றம்சாட்டப்பட்ட இருவரின் ஒருவர் கைதாகி  ஜாமீனில் வெளிவர மற்றொருவர் இதுவரை கைது செய்யப்படவில்லை. 

இந்த வழக்கு உன்னாவை அடுத்துள்ள ரே பரேலி மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் நேற்று அதிகாலை நீதிமன்றத்தில் ஆஜராக தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணை வழிமறித்த குற்றவாளிகள் இருவர் உள்படஐந்து பேர் வழிமறித்து தாக்கியதோடு,  மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்தனர். இதில் அலறித்துடித்த அப்பெண் உதவி கேட்டு ஓடியுள்ளார்.அப்போது விவசாயி ஒருவரும், அவரது மனைவியும் அந்த பெண்ணுக்கு உதவி செய்துள்ளனர். தீப்பற்றிய உடலில் போர்வை போர்த்தியதுடன் அவசர உதவி எண்ணை  அழைத்துள்ளனர். 

இதை தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் லக்னோவில் மருத்தவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அப்பெண்  அங்கிருந்து  விமானம் மூலம் டெல்லிக்கு சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதையடுத்து  அப்பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த 5 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு 11.10 மணியளவில் அந்த பெண்ணுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கூறியுள்ள அப்பெண்ணின் தந்தை, ‘குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரைவில் தூக்கிலிடப்பட வேண்டும் அல்லது சுட்டுக் கொல்லப்பட வேண்டும். வழக்கு தொடர்ந்து அது பல ஆண்டுகளுக்கு இழுக்கப்படுவதை நான் விரும்பவில்லை. போலீசார் எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. அவர்களின் உதவி கிடைத்திருந்தால் என் மகள் இறந்திருக்க மாட்டாள்’ என்றார்.