×

என் தொலைபேசி உரையாடலை முதல்வர் ஒட்டு கேட்கிறார்: பிரபல நடிகை பரபரப்பு புகார்!

மண்டியாவில் முதல்வர் குமாரசாமியின் மகனை எதிர்த்து போட்டியிடுவதால் எனது தொலைபேசியை முதல்வர் ஒட்டு கேட்கிறார் என நடிகை சுமலதா குற்றம் சாட்டியுள்ளார். மண்டியா: மண்டியாவில் முதல்வர் குமாரசாமியின் மகனை எதிர்த்து போட்டியிடுவதால் எனது தொலைபேசியை முதல்வர் ஒட்டு கேட்கிறார் என நடிகை சுமலதா குற்றம் சாட்டியுள்ளார். முதல்வர் மகனுடன் மோதும் சுமலதா மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகருமான அம்பரீஷின் மனைவி சுமலதா கர்நாடகாவின் மண்டியா தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். அதன்படி ஆதரவாளர்களைச் சந்தித்து, ஆதரவு
 

மண்டியாவில் முதல்வர் குமாரசாமியின் மகனை எதிர்த்து போட்டியிடுவதால் எனது தொலைபேசியை முதல்வர் ஒட்டு கேட்கிறார் என நடிகை சுமலதா குற்றம் சாட்டியுள்ளார்.

மண்டியா: மண்டியாவில் முதல்வர் குமாரசாமியின் மகனை எதிர்த்து போட்டியிடுவதால் எனது தொலைபேசியை முதல்வர் ஒட்டு கேட்கிறார் என நடிகை சுமலதா குற்றம் சாட்டியுள்ளார்.

முதல்வர் மகனுடன் மோதும் சுமலதா

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகருமான அம்பரீஷின் மனைவி சுமலதா கர்நாடகாவின் மண்டியா தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். அதன்படி ஆதரவாளர்களைச் சந்தித்து, ஆதரவு திரட்டினார்.  ஆனால்  காங்கிரஸ் தலைமையோ, மண்டியா தொகுதியைக் குமாரசாமியின் மஜதவுக்கு ஒதுக்கியுள்ளது. அங்கு முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில், களமிறங்கவுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்துள்ள சுமலதா, மண்டியாவில் சுயேச்சையாகக்  களமிறங்கியுள்ளார். அவருக்கு பாஜக அதர்வளித்துள்ளது. 

தொலைபேசியை ஒட்டு கேட்கிறார் குமாரசாமி 

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த சுமலதா, எனக்கு பாஜக கொடுத்துள்ள ஆதரவால், எங்களுக்குக் கூடுதல் பலம் கிடைத்துள்ளது. அதைப் பொறுக்க முடியாததால், எனக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் தர்ஷன் மற்றும் நடிகர் யஷ்ஷை ஆகியோரது வீட்டைத் தாக்கியும், தொலைப்பேசியில் மிரட்டல் விட்டும் வருகின்றனர். ஆனால் மிரட்டலுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம். நான் யாரைச் சந்திக்கிறேன் என்பது முதல் எனது தொலைபேசி பேச்சு வரை அதிகாரிகள் ஒட்டுகேட்கிறார்கள். முதல்வர் குமாரசாமியின் மகனுக்கு எதிராகப் போட்டியிடுவதாலேயே  இது போன்ற முறைகேடுகள்  நடக்கிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப் போகிறேன்’ என்றார். 

ஒரே பெயரில் மூன்று வேட்பாளர்கள் 

இதனிடையே மாண்டியா தொகுதியில், சுமலதா பெயரில் மேலும் 3 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுவதால் வாக்காளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இது குமாரசாமியின் வேலைதான் என்று சுமலதா தரப்பினர் குற்றச்சாட்டி வருகின்றனர். 

 

இதையும் வாசிக்க: சிறுவனை அடைத்து வைத்து 4 நாட்கள் பாலியல் தொந்தரவு தந்த ஆசிரியை: மதுரையில் பரபரப்பு!