×

என் தாயையும் பழி வாங்குகிறது பாஜக: ராபர்ட் வதேரா உருக்கம்

வயதான என் தாயையும் பாஜக பழி வாங்குகிறது என நில மோசடி வழக்கில் விசாரிக்கபடும் ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார் புதுதில்லி: வயதான என் தாயையும் பாஜக பழி வாங்குகிறது என நில மோசடி வழக்கில் விசாரிக்கபடும் ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார். பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா, ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனம் ராஜஸ்தானில் நில மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். லண்டனில் சொத்து வாங்கிய
 

வயதான என் தாயையும் பாஜக பழி வாங்குகிறது என நில மோசடி வழக்கில் விசாரிக்கபடும் ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார்

புதுதில்லி: வயதான என் தாயையும் பாஜக பழி வாங்குகிறது என நில மோசடி வழக்கில் விசாரிக்கபடும் ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா, ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனம் ராஜஸ்தானில் நில மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். லண்டனில் சொத்து வாங்கிய விவகாரத்தில் நிதி மோசடி தொடர்பாக அமலாக்கப்பிரிவு டெல்லியில் அவரிடம் தொடர்ந்து மூன்று நாட்கள் விசாரணையை நடத்தியது. 

இவ்வழக்கு விசாரணையில் வதேரா மட்டுமட்டுமின்றி அவரது தயார் மவுரினிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ராஜஸ்தான் மாநிலம் பிகானிர் நில விவகாரம் தொடர்பான விசாரணைக்காக ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வதேராவும், மவுரினும் ஆஜரானர்கள். 

இதுகுறித்து ராபர்ட் வதேரா,  கடந்த 4 1/2 ஆண்டுகளாக எதுவும் செய்யாமல், தேர்தல் வரவுள்ள வேளையில்  என்னை விசாரணைக்கு அழைப்பது பாஜகவின் அரசியல்.  இதில் என்னை மட்டுமல்லாது, 75 வயதாகும் என் தாயையும் விசாரணைக்காக அழைத்திருப்பது அரசின் மிக மோசமான பழிவாங்கும் அரசியலையே காட்டுகிறது. மூத்த குடிமக்களை இவ்வாறு அலைக்கழிப்பது என்ன நியாயம்? என கேள்வி எழுப்பியுள்ளார்.