×

‘எங்க பசங்களுக்காக இத மட்டும் செய்யுங்க’: வாடிக்கையாளர்களுக்கு கோரிக்கை வைத்த ஜொமோட்டோ!?

கோடை வெயில் மண்டையைப் பிளக்கும் நிலையில், ஜொமோட்டோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்குக் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது. கோடை வெயில் மண்டையைப் பிளக்கும் நிலையில், ஜொமோட்டோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்குக் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது. வளர்ச்சியை நோக்கி பயணம் செய்யும் நம் மக்களின் அன்றாட தேவைகள் கூட நவீனமயமாகி விட்டன. அதிலும், ‘ஆன்லைன் ஷாப்பிங்’ என்ற முறை வந்த பிறகு, எலக்ட்ரானிக் பொருட்கள் முதல் உணவு வரை நமக்குத் தேவையான அனைத்து பொருட்களுமே நம் வீட்டை நோக்கிப்
 

கோடை வெயில் மண்டையைப் பிளக்கும் நிலையில், ஜொமோட்டோ நிறுவனம்  தனது வாடிக்கையாளர்களுக்குக் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது. 

கோடை வெயில் மண்டையைப் பிளக்கும் நிலையில், ஜொமோட்டோ நிறுவனம்  தனது வாடிக்கையாளர்களுக்குக்  கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது. 

வளர்ச்சியை நோக்கி பயணம் செய்யும் நம் மக்களின்   அன்றாட தேவைகள் கூட நவீனமயமாகி விட்டன. அதிலும், ‘ஆன்லைன் ஷாப்பிங்’ என்ற முறை வந்த பிறகு, எலக்ட்ரானிக் பொருட்கள் முதல் உணவு வரை நமக்குத் தேவையான அனைத்து  பொருட்களுமே நம் வீட்டை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றன. 

அதிலும் குறிப்பாக, தேவையான உணவை ஆர்டர் செய்த அரை மணி நேரத்தில் இருக்கும் இடத்திற்கே வந்து டெலிவரி செய்து விடுகிறார்கள். அப்படி, டெலிவரி செய்வதற்கு ‘டெலிவரி பாய்ஸ்’ என்ற பெயரில் ஏராளமான இளைஞர்கள் இரவு மகள் பாராமல் உழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜொமோட்டோ நிறுவனம்  டெலிவரி ஊழியர்களுக்காகத்  தனது வாடிக்கையாளர்கள் 
மத்தியில் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது. அதில் ‘உணவினை டெலிவரி செய்யும் டெலிவரி பாய்கள், தண்ணீர்ப் பிரச்னையால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்குத் தண்ணீர் கொடுத்து உதவுங்கள். வெயிலின் தாக்கத்தை நாம் ஒன்றும் செய்யமுடியாது.ஆனால்  அதிலிருந்து நம்மை காத்துக் கொள்ளமுடியும். அதனால் மனிதத்தன்மையுடன்  குடிக்கத் தண்ணீர் கொடுத்து உதவுங்கள்’ என்று கோரிக்கை வைத்துள்ளது. இதற்குப் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

 

இருப்பினும் வெயிலின் தாக்கத்தால் பலரும்  பாதிக்கப்பட்டு வரும் நிலையில் டெலிவரி  ஊழியர்கள் மட்டுமில்லாது தண்ணீர் இல்லாமல் நாவறண்டு நிற்கும் யாராக இருந்தாலும் அவர்களுக்குத் தண்ணீர் வழங்குவதே மனிதமாகும். .