×

ஊழல்வாதி ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டது ஆச்சரியம்: சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம்

ரிசர்வ் வங்கியின் ஆளுநராக மிகப்பெரிய ஊழல்வாதி நியமிக்கப்பட்டிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். ஐதராபாத்: ரிசர்வ் வங்கியின் ஆளுநராக மிகப்பெரிய ஊழல்வாதி நியமிக்கப்பட்டிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் கடந்த 11-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா பரபரப்பை ஏற்படுத்திய சூழலில், தனது சொந்த காரணங்களுக்காக மட்டுமே ராஜினாமா செய்கிறேன் என
 

ரிசர்வ் வங்கியின் ஆளுநராக மிகப்பெரிய ஊழல்வாதி நியமிக்கப்பட்டிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

ஐதராபாத்: ரிசர்வ் வங்கியின் ஆளுநராக மிகப்பெரிய ஊழல்வாதி நியமிக்கப்பட்டிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் கடந்த 11-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா பரபரப்பை ஏற்படுத்திய சூழலில், தனது சொந்த காரணங்களுக்காக மட்டுமே ராஜினாமா செய்கிறேன் என அவர் விளக்கமளித்தார். இதனையடுத்து ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பாஜகவின் மூத்த தலைவரும், எம்.பியுமான சுப்பிரமணியன் சுவாமி ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் மிகப்பெரிய ஊழல்வாதி. நிதி அமைச்சகத்தில் இருந்து அவரை பதவி நீக்கம் செய்ய வைத்தேன். அப்படிப்பட்டவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டது ஆச்சரியத்தை அளிக்கிறது. ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவிக்கு பெங்களூர் ஐஐஎம் பேராசிரியர் வைத்தியநாதன்  தகுதியானவர். அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர் என்றார்.