×

ஊரடங்கை மீறி வெளியில் சென்றவர்களை துரத்திய காவலர்கள்! மின்சாரம் தாக்கி உயிரிழந்த 13பேர்!!

ஆந்திராவில் டிராக்டர் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் மின் வயர்கள் அறுந்து விழுந்து 13பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் நெல்லூர் அடுத்த பிரக்காசம் மாவட்டத்தில் டிராக்டரில் 9 பேர் பயணித்துக்கொண்டிருந்தனர். ஊரடங்கை மீறி தடுப்புகளை தாண்டி சென்றவர்களை காவல்துறை துரத்தி சென்றனர். அப்போது காவல்துறையிடமிருந்து தப்பி செல்ல முயற்சித்த ட்ராக்டர் ஓட்டுனர், சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் ட்ராக்டரை மோதினார். இதில் மின் கம்பத்திலிருந்து மின்சாரம் பாய்ந்து, டிராக்டரில் பயணித்த 9 பேர் பரிதாபமாக நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். டிராக்டரில்
 

ஆந்திராவில் டிராக்டர் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் மின் வயர்கள் அறுந்து விழுந்து 13பேர் உயிரிழந்தனர். 

ஆந்திர மாநிலம் நெல்லூர் அடுத்த பிரக்காசம் மாவட்டத்தில் டிராக்டரில் 9 பேர் பயணித்துக்கொண்டிருந்தனர். ஊரடங்கை மீறி தடுப்புகளை தாண்டி சென்றவர்களை காவல்துறை துரத்தி சென்றனர். அப்போது காவல்துறையிடமிருந்து தப்பி செல்ல முயற்சித்த ட்ராக்டர் ஓட்டுனர், சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் ட்ராக்டரை மோதினார். இதில் மின் கம்பத்திலிருந்து மின்சாரம் பாய்ந்து, டிராக்டரில் பயணித்த 9 பேர் பரிதாபமாக நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

டிராக்டரில் மொத்தம் 30 விவசாய தொழிலாளர்கள் சென்றுகொண்டிருந்தனர். அவர்களில் 7 பெண்கள், 2 ஆண்கள் ஆகிய 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மீதமுள்ளவர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.