×

ஊரடங்கை எவ்வளவு நாட்கள் நீட்டிப்பது… மோடி முக்கிய ஆலோசனை!

கொரோனா பாதிப்பைத் தவிர்க்க கடந்த மார்ச் 24ம் தேதி 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5000-ஐ தாண்டிவிட்டது. இன்னும் கொரோனா சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்காத நிலையில், இன்னும் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவில்லை. ஊரடங்கு நீட்டிப்பு பற்றி ஏப்ரல் 11ம் தேதிக்குப் பிறகு மோடி அறிவிப்பு வெளியிடுவார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. கொரோனா பாதிப்பைத் தவிர்க்க கடந்த மார்ச் 24ம் தேதி 21 நாள் ஊரடங்கு
 

கொரோனா பாதிப்பைத் தவிர்க்க கடந்த மார்ச் 24ம் தேதி 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5000-ஐ தாண்டிவிட்டது. இன்னும் கொரோனா சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்காத நிலையில், இன்னும் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவில்லை. 

ஊரடங்கு நீட்டிப்பு பற்றி ஏப்ரல் 11ம் தேதிக்குப் பிறகு மோடி அறிவிப்பு வெளியிடுவார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
கொரோனா பாதிப்பைத் தவிர்க்க கடந்த மார்ச் 24ம் தேதி 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5000-ஐ தாண்டிவிட்டது. இன்னும் கொரோனா சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்காத நிலையில், இன்னும் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவில்லை. 

இந்த நிலையில் பல மாநில முதல்வர்களும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். நொய்டாவில் ஊரடங்கு ஏப்ரல் இறுதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மூத்த அமைச்சர்கள், குடியரசு துணைத் தலைவர் உள்ளிட்ட பலரும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்ற வகையில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து அனைத்து மாநில முதல்வர்களின் கருத்துக்களைக் கேட்க உள்ளார் மோடி. ஏப்ரல் 11ம் தேதி மாநில முதல்வர்களுடனான வீடியோ கான்ஃபரன்சிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் பிறகே ஊரடங்கை நீட்டிப்பது பற்றியும், எத்தனை நாட்களுக்கு நீட்டிப்பது என்பது பற்றியும் முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. சர்வதேச ஆய்வு நிறுவனங்கள் இந்தியாவில் செப்டம்பர் முதல் வாரம் வரை ஊரடங்கு தொடர்வதற்கான வாய்ப்புள்ளதாக கணிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.