×

ஊரடங்கு விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை! – உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

ஊரடங்குக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சகம் இந்த விதிகளை மீறினால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊரடங்குக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சகம் இந்த விதிகளை மீறினால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊரடங்கு மேலும் மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில், ஏப்ரல் 20ம் தேதியில் இருந்து சில தளர்வுகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக கிராமப்புற
 

ஊரடங்குக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சகம் இந்த விதிகளை மீறினால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஊரடங்குக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சகம் இந்த விதிகளை மீறினால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஊரடங்கு மேலும் மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில், ஏப்ரல் 20ம் தேதியில் இருந்து சில தளர்வுகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக கிராமப்புற அளவில் விவசாயப் பணிகள் தங்கு தடையின்றி நடக்கவும், தொழிற்சாலைகள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தக் கடுமையான செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

இவற்றை மீறி செயல்படுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் கீழ் வழக்கு தொடரப்படும் என்றும் அவர்கள் மீது இந்தியக் குற்றவியல் சட்டம் (ஐ.பி.சி) செக்‌ஷன் 188 படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.