×

ஊரடங்கு உத்தரவை மீறி அரிசி விற்ற மாநில பா.ஜ.க தலைவர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு!

கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை புதுச்சேரியிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. அரசின் உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அரசு அறிவுறுத்தியிருப்பதன் பேரில், போலீசார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். அதாவது தடையை மீறி வெளியே செல்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. மக்கள் கூட்டத்தை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வரும்
 

கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை புதுச்சேரியிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. அரசின் உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அரசு அறிவுறுத்தியிருப்பதன் பேரில், போலீசார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். அதாவது தடையை மீறி வெளியே செல்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.  

மக்கள் கூட்டத்தை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்  என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வரும் இந்த நிலையில் புதுச்சேரி லாஸ்பேட்டையில் வசித்து வரும் புதுச்சேரி மாநில பா.ஜ.க தலைவரும் எம்.எல்.ஏவுமான சாமிநாதன் 10 கிலோ அரிசி பாக்கெட் விற்பனை செய்திருக்கிறார். மக்கள் வெளியே செல்ல முடியாத இந்த சூழலில் அவர் அரிசி விற்றதால் மக்கள் கூட்டம் அங்கு அலைமோதியுள்ளது. இதனையறிந்த போலீசார், அங்கு சென்று மக்களை அறிந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். மேலும், எம்.எல்.ஏ சாமிநாதன், நெசவாளர் நகர் முத்து மற்றும் அப்பகுதியை சேர்ந்த சோமு ஆகிய மூன்று பேர் மீதும் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.