×

ஊரடங்கால் வயநாட்டில் அச்சமின்றி சாலைகளில் சுற்றித் திரியும் வனவிலங்குகள்

ஊரடங்கால் வயநாட்டில் வனவிலங்குகள் அச்சமின்றி சாலைகளில் சுற்றித் திரிய ஆரம்பித்துள்ளன. வயநாடு: ஊரடங்கால் வயநாட்டில் வனவிலங்குகள் அச்சமின்றி சாலைகளில் சுற்றித் திரிய ஆரம்பித்துள்ளன. கேரளாவில் கொரோனா தொற்று நோயால் இதுவரை 497 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் மற்ற மாநிலங்களை காட்டிலும் கேரளாவில் கொரோனா பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் உள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக மக்கள் அதிகம் வெளியே வராததால் வயநாடு பகுதியில் காட்டு விலங்குகள் சுதந்திரமாக சுற்றித் திரிய
 

ஊரடங்கால் வயநாட்டில் வனவிலங்குகள் அச்சமின்றி சாலைகளில் சுற்றித் திரிய ஆரம்பித்துள்ளன.

வயநாடு: ஊரடங்கால் வயநாட்டில் வனவிலங்குகள் அச்சமின்றி சாலைகளில் சுற்றித் திரிய ஆரம்பித்துள்ளன.

கேரளாவில் கொரோனா தொற்று நோயால் இதுவரை 497 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் மற்ற மாநிலங்களை காட்டிலும் கேரளாவில் கொரோனா பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் உள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக மக்கள் அதிகம் வெளியே வராததால் வயநாடு பகுதியில் காட்டு விலங்குகள் சுதந்திரமாக சுற்றித் திரிய ஆரம்பித்துள்ளன.

ஊரடங்குக்கு முன்னர் சாலைகளில் பல விலங்குகள், பறவைகள் வண்டிகளில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தன. ஆனால் தற்போது மனித நடமாட்டமும், வாகனங்கள் சாலைகளில் செல்வதும் பெருமளவில் குறைந்துள்ளதால் அத்தகைய சம்பவங்கள் ஒன்று கூட நிகழவில்லை. அதனால் இதுவரை அதிகமாக வெளியே தலைகாட்டாத விலங்குகள் கூட சாலைகளுக்கு வந்து அச்சமின்றி கடந்து செல்கின்றன. மேலும் வயநாட்டில் வனப்பகுதிக்குள் வனவிலங்குகளின் இருப்பு அதிகரித்துள்ளது.