×

ஊடரங்கு உத்தரவை கடுமைப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு!

சீனாவின் வூகான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவி 180 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வூகான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவி 180 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பகட்டத்தில் கொரோனாவை லேசாக எடுத்துக் கொண்ட உலக நாடுகள், தற்போது உயிரிழப்புகளை தடுக்க முடியாமல் திணறி வருகின்றன. கொரோனா பரவிய 4 முதல் 5 வாரங்களில் அதன் பாதிப்பு பன்மடங்காக அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தகைய அபாயகரமான கட்டத்தில் தற்போது
 

சீனாவின் வூகான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவி 180 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வூகான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவி 180 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பகட்டத்தில் கொரோனாவை லேசாக எடுத்துக் கொண்ட உலக நாடுகள், தற்போது உயிரிழப்புகளை தடுக்க முடியாமல் திணறி வருகின்றன. கொரோனா பரவிய 4 முதல் 5 வாரங்களில் அதன் பாதிப்பு பன்மடங்காக அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தகைய அபாயகரமான கட்டத்தில் தற்போது இந்தியா இருப்பதால் மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. 

இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையின் அடுத்த கட்டமாக 75 மாவட்டங்களை தனிமைப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. அந்த மாவட்டங்களின் பட்டியலில் தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை கடுமை படுத்துமாறும், அதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.