×

உலகிலேயே அதிகமாக போலி செய்திகள் பரப்பும் நாடுகளில் இந்தியாவுக்கு முதலிடம்?

மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்திய ஆய்வில், உலகிலேயே அதிகமாக போலி செய்திகள் பரப்பும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. சென்னை: மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்திய ஆய்வில், உலகிலேயே அதிகமாக போலி செய்திகள் பரப்பும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. போலி செய்திகள் அதிகமாக பரப்பும் நாடுகளின் விபரம் குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆய்வு ஒன்று நடத்தியது. இதில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. அந்த அறிக்கையில், உலகம் முழுக்க 57% மக்களும், 64%
 

மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்திய ஆய்வில், உலகிலேயே அதிகமாக போலி செய்திகள் பரப்பும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.

சென்னை: மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்திய ஆய்வில், உலகிலேயே அதிகமாக போலி செய்திகள் பரப்பும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.

போலி செய்திகள் அதிகமாக பரப்பும் நாடுகளின் விபரம் குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆய்வு ஒன்று நடத்தியது. இதில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. அந்த அறிக்கையில், உலகம் முழுக்க 57% மக்களும், 64% இந்திய மக்களும் போலி செய்திகளை எதிர்கொண்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

64% இந்தியர்கள் எதிர்கொண்ட போலி செய்திகளில் 54% இணையதளங்களில் வேண்டுமென்றே பரப்பப்படும் போலி செய்தியாக இருக்கின்றது. இதுபோன்ற போலி செய்திகளால் சாமானிய மக்கள் பலர் பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக, வாட்ஸ் அப்பில் பரப்பப்படும் போலி செய்திகளினால் சிலர் கொலை செய்யப்பட்ட சம்பவமும் இங்கே நிகழ்ந்திருக்கிறது. அதேபோல் அரசியல் கட்சிகளின் ஐடி விங்கும் போலி செய்திகள் பலவற்றை தொடர்ந்து பரப்பி வருகின்றன. வாட்சப்பில் போலி செய்திகள் பரவுவதை தடுக்க, அந்நிறுவனம் ஒரு செய்தியை சிலருக்கு மட்டுமே அனுப்ப முடியும் என்ற பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. செய்தி நிறுவனங்கள் பரப்பும் போலி செய்திகளை கண்டறிய ஆல்ட் நியூஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. எனினும் போலி செய்திகள் பரப்பும் நாடுகளில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.